சிவகங்கை மாவட்டம் மடப்புரம் இளைஞர் அஜித்குமார் லாக்கப் மரணத்துக்கு நீதி விசாரணை கோரி தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் நேற்று ஜூன் 30-ந் தேதி திடீர் போராட்டம் நடத்தினர். Ajithkumar lockup death AIADMK
மடப்புரம் அஜித்குமார், கோவில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். நகை திருட்டு சம்பவம் தொடர்பாக அஜித்குமாரை திருப்புவனம் போலீசார் விசாரித்தனர். இந்த விசாரணையின் போது அஜித்குமார் மரணமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில், அஜித்குமார் மரணம் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு 5 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
முன்னதாக அஜித்குமார் லாக்கப் மரணத்துக்கு நீதி விசாரணை கோரியும் போலீசாரை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். “Jusitce For Ajithkumar” என்ற பதாகைகளை ஏந்தியபடி தமிழ்நாடு முழுவதும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர்.