மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார் பயணித்த தனி விமானம் பாராபதி விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விபத்தில் சிக்கியது. இந்த விமானத்தில் பயணித்த 6 பேரும் பலியாகி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் பயணித்த விமானம் பாராமதியில் விபத்தில் சிக்கியதில் விமானத்தில் பயணித்த 6 பேரும் பலியாகி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சருமான அஜித் பவார், உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், தனது சொந்த ஊரான பாராமதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை மும்பையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டார்.
அவரது விமானம் (Learjet 45) பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குப் பிறகு விமானம் தீப்பிடித்து எரிந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.விமானத்தில் அஜித் பவார், அவரது உதவியாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட ஆறு பேர் பயணித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆரம்பத்தில் அஜித் பவார் காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியான நிலையில், பின்னர் அவர் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது. விமானத்தில் பயணித்த ஆறு பேருமே உயிரிழந்ததாக தகவல்கள் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் பாராமதி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அஜித் பவாரின் குடும்ப உறுப்பினர்கள் (சுப்ரியா சுலே, சுனேத்ரா பவார் உள்ளிட்டோர்) பாரமதிக்கு விரைந்துள்ளதாக தகவல்க்ள் வெளியாகி உள்ளது.
அஜித் பவார் மரணம் மகாராஷ்டிரா அரசியலில் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
