கலப்பட கட்சி.. விஜய், செங்கோட்டையன் மீது அதிமுக கே.பி. முனுசாமி கடும் தாக்கு! ஒருமையில் விமர்சனம்!

Published On:

| By Mathi

AIADMK TVK Vijay

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்களான செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோரை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார் அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேபி முனுசாமி பேசியதாவது: நாங்க தூய்மையான கட்சி என்றார் விஜய். என்ன தூய்மையான கட்சி நீ? நீ எப்படி தூய்மையான கட்சியாக முடியும்? நீ எப்ப தூய்மையான கட்சின்னு சொன்னா.. நீ இன்னும் ஆட்சிக்கு வரலை..உன்னுடைய நடவடிக்கை என்னான்னு தெரியாது. நீ ஆட்சிக்கு வந்த பின்னாடி எப்படிப்பட்ட திட்டங்கள் கொண்டு வருவன்னு தெரியாது. அப்படி திட்டத்தைக் கொண்டு வந்த பின்னாடி அதை எவ்வளவு ஒழுக்கமாக அதை நிறைவேற்றுவாய் என சொல்ல முடியாது.

ADVERTISEMENT

உன்னுடைய கட்சியிலேயே நீ ஆரம்பிக்கும் போது உன்னுடைய ரசிகர்களுடன் ஆரம்பிச்ச.. அது தனித்தன்மையானது. ஆனால் இன்றைக்கு 17 கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உன்கிட்ட வந்திருக்காங்க.. அப்படி வந்தவங்க யாரு தெரியுமா? சந்தர்ப்பவாதிகள். எங்க இடம் கிடைக்கும்? எங்க வாய்ப்பு கிடைக்கும்? எங்க வசதியான தலைமை பொறுப்பு கிடைக்கும்? அடுத்த தேர்தலில் எங்க பதவிக்கு வரலாம்? அப்படின்னு நினைக்கிறவங்கதான் உன்னோட சேர்ந்திருக்காங்க..

உன் கொள்கை பரப்பு செயலாளர்கள் எல்லாம் யாரு? லாட்டரி டிக்கெட் விக்கிறவன்.. இந்தியா முழுவதும் லாட்டரி டிக்கெட் விக்கிறவன்.. அவரு ஏற்கனவே ஒரு கட்சிக்குப் போனாரு.. திமுகவில் இருந்தாரு.. அங்க இருந்து வெளியேறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு வந்தாரு.. அங்க திருமாவளவன் பெரிய பதவி கொடுத்தாரு.. அங்கேயும் சண்டை போட்டார்.. அங்கிருந்து வெளியே வந்து பல கட்சிகளுக்கும் போகப் பார்த்தார்.. நம்ம கட்சிக்கே வந்துடனும்னு பார்த்தார்.. நம்ம கட்சியில எல்லாம் வந்த உடனே உயர்ந்த இடத்துக்கு எல்லாம் வந்துடமுடியாது. ஏன்னா இது உழைக்கிறவனுக்காக கட்சி.. அதனாலதான் ஒன்னுமே இல்லாம கிராமப்புறத்துல இருந்த சாதாரண எடப்பாடி பழனிசாமி, இந்த கட்சிக்குப் பொதுச்செயலாளராகி இருக்கிறார். அவர் உழைச்சு உழைச்சு உழைச்சு தலைவர்கள்கிட்ட நல்ல பெயர் வாங்கி இந்த இடத்துக்கு வந்துள்ளார்.

ADVERTISEMENT

இங்கே யாருமே திடீர்னு வந்த ஆள் கிடையாது.. அவருகிட்ட இருக்கிறவங்க சந்தர்ப்பவாதிகள்.. நம்ம கட்சியில் இருந்தும் ஒரு ஆள் போயிருக்கார்..

இந்த செங்கோட்டையனை யாருக்கு தெரியும்? 53 ஆண்டுகாலம் இந்த கட்சியில் இருந்து எல்லா பதவி சுகத்தையும் அனுபவித்தவர். எத்தனை முறை அமைச்சரான? அந்த அமைச்சராக யார் காரணம்? அந்த பதவி கிடைக்க யார் காரணம்? இந்த கட்சிதான் காரணம். இன்னிக்கு பொருளாதாரத்துல உயரத்துல இருக்கிற பல கல்லூரிகள் வெச்சுருக்கிற.. பல நூற்று கணக்கான ஏக்கர் நிலம் வெச்சிருக்கிற.. இந்த கட்சி காரணம். இந்த கட்சியால் இவ்வளவு வசதி வாய்ப்பு, பதவி சுகம் அனுபவித்த நீ.. இந்த கட்சிக்கு பல்வேறு வகையான இடையூறுகளை செய்த.. அதனால பொதுச்செயலாளர் அவரை கூப்பிட்டு அறிவுரை சொன்னாரு.. கேட்கலை.. பொது இடத்துல கட்சித் தலைமைக்கு கெடு வெச்சா யாரு பொறுத்துக்குவா? ஒரு கட்சித் தலைமைக்கு நீ கெடு வைக்கலாமா? அந்த கட்சி ஒரு கட்டுக் கோப்பா இருக்குமா? அந்த கட்சி உடைஞ்சிரும்ல.. வேறவழி இல்லை.. கட்சியில் இருந்து எடுத்தோம்.

ADVERTISEMENT

நீ அங்க போயிட்டு புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கு அடுத்து புரட்சித் தளபதி விஜய்னு பேசுற வெட்கமா இல்லையா? இப்படிப்பட்ட கலவையான மனிதர்கள்தான் உன்கிட்ட இருக்காங்க.. ஆதவ் அர்ஜூனா பல கட்சிக்கு போயிட்டு வந்தவரு.. இன்னொருத்தர் பாஜகவுல இருந்து நம்மகிட்ட வந்துகிட்டு அங்கே போனவரு.. இவர்கள்தான் உன்னை சுத்தி இருக்காங்க நீ ஜாக்கிரதையா இருக்கனும்.. இவ்வாறு கே.பி.முனுசாமி பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share