அதிமுக எங்களுக்கு எனிமி இல்லை : அண்ணாமலை

Published On:

| By Kavi

AIADMK is not our enemy Annamalai

திமுகவை தவிர அதிமுக உள்ளிட்ட யாரும் எங்களுக்கு எனிமி கிடையாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். AIADMK is not our enemy Annamalai

இன்று (மார்ச் 4) சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,  “திமுகதான் எங்கள் ஒரே எதிரி… திமுகவை வீழ்த்த யார் கூட வேண்டுமானாலும் கூட்டணி வைக்கலாம்” என்று பாஜக – அதிமுக கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதிலளித்திருந்தார்.

இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “இது அவசரமாக பேச வேண்டிய சப்ஜெக்ட் கிடையாது” என்று கூறிவிட்டு விமானம் மூலம் சென்னை வந்தார்.

சென்னையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  “எங்களை பொறுத்தவரை திமுக வீட்டுக்கு போக வேண்டும். தமிழகத்தில் பாஜக வளர்கிறது என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள்.

நாங்கள் எல்லோரிடமும் அன்பாகத்தான் பழகுகிறோம். எங்களுக்கு யாரும் எனிமி கிடையாது.  எங்களுக்கு பாஜக தமிழகத்தில் நிலைத்து வரவேண்டும். தேர்தலின் போது என்.டி.ஏ.வில் யார் இருப்பார்கள். பெரிய கட்சியா… சின்ன கட்சியா எல்லாம் வருகிற காலத்தில் சொல்லுவோம்.

வருகிற காலத்திலும் என்.டி.ஏ.வில் அமமுக இருக்கும் என்று டி.டி.வி. தினகரன் சொல்லியிருக்கிறார்” என பதிலளித்தார்.    AIADMK is not our enemy Annamalai

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share