NDA கூட்டணி கட்சிகளுடன் பேச தொகுதி பங்கீட்டு குழு அமைத்த அதிமுக

Published On:

| By Pandeeswari Gurusamy

EPS

அதிமுக தலைமையிலான NDA கூட்டணி கட்சிகளுடன் பேச தொகுதி பங்கீட்டு குழுவை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கட்சியின் தேர்தல் பணிகளுக்காகவும், கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும் பல்வேறு முக்கியக் குழுக்களை அமைத்துள்ளார்.

ADVERTISEMENT

கூட்டணிக் கட்சித் தொகுதிப் பங்கீட்டுக் குழு

தேசிய ஜனநாயகக் கூட்டணி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன். எஸ்.பி. வேலுமணி, பி. வளர்மதி ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

மேலும், கட்சியின் கொள்கை முடிவுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை வகுக்கும் “ஆட்சி மாற்றக் குழுவை” திருத்தி அமைத்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
5 பேர் அடங்கிய திமுக சட்டக்குழு, 7 பேர் அடங்கிய செய்தியாளர்களை சந்திக்கும் குழுவையும் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share