ஹெல்மெட் அணியாமல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் – வீடியோ வைரல்

Published On:

| By Pandeeswari Gurusamy

amman

​கோவை தெற்கு தொகுதியில் அதிமுக சார்பில் இரண்டாவது முறையாகப் போட்டியிடும் அம்மன் அர்ஜுனன், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

செந்தில் பாலாஜி Vs அம்மன் அர்ஜூனன்

கோவை மாவட்டத்தில் உள்ள கோவை வடக்கு தொகுதி மட்டும் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் கோவை வடக்கு தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்ற வேட்பாளர் அம்மன் அர்ஜூனன் இம்முறை கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் திமுக சார்பில் கரூர் எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி போட்டியிடுவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

ADVERTISEMENT

ஹெல்மெட் அணியாத வேட்பாளர்

இந்நிலையில், அம்மன் அர்ஜுனன் தனது ஆதரவாளர்களுடன் இருசக்கர வாகனங்களில் தொகுதி முழுவதும் வலம் வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றாமல் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். அவரது ஆதரவாளர்கள் பலரும் ஹெல்மெட் அணியாமல் அம்மன் அர்ஜூனன் வாகனத்தை ஓட்டி வருகின்றனர்.

இதுகுறித்த வீடியோவை அதிமுகவினரே எடுத்து சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ ஆகப் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலான நிலையில், சட்டத்தை மதிக்க வேண்டிய வேட்பாளரே விதிகளை மீறுவதா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ADVERTISEMENT

ஹெல்மெட் அணியாமல் சென்ற வேட்பாளர் மீது போலீசார் உரிய அபராதம் விதிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகின்றனர். தேர்தல் சமயத்தில் அதிமுக வேட்பாளரின் பிரச்சார வீடியோ கோவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைரல் வீடியோ

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share