வைஃபை ஆன் செய்ததும், “கொட்டும் மழையிலே கூடிய கூட்டம் காண்! பச்சிளம் குழந்தைகளிடம் இருவண்ண கொடி காண்!” என உணர்ச்சி ததும்ப பேசியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
என்னய்யா.. கரூரில் இருந்து நேராக வந்துட்டீராக்கும்?
ஆமாம்யா.. கரூர் திமுக முப்பெரும் விழா பக்கம் போயிருந்தேன்.. மிரண்டு போய்தான் வந்தேன்..
எப்பவுமே திமுகவுக்கு வரும் கூட்டம்தான்யா?
அதென்னமோ உண்மைதான்.. இப்பதான் ஆள் ஆளுக்கு கூட்டம் கூட்டி ‘மாஸ்’ காட்டுறாங்களே.. அதை எல்லாம் ஒப்பிடும்போதும், ‘அடேங்கப்பா’ன்னு சொல்ல வைக்குது..
அப்படி என்னப்பா அடேங்கப்பா?
திமுகன்னாலே ‘அடங்காத அடலேறுகள்’னு சொல்லி வெச்சாங்க சிலர்.. ஆனால் ‘தலைமை’க்கு கட்டுப்பட்ட அசராத கூட்டம்னு நிரூபிச்சதுய்யா கரூர்..
‘புராணம்’ போதும்.. கரூர் மழைக்கு நடுவே கிடைச்ச ‘சூடான’ தகவலை ஷேர் பண்ணிடுப்பா..
ஆமாம்பா.. கொங்கு மண்டலத்தில் திமுக கொஞ்சம் பலவீனமாத்தான் இருக்கு.. அதிமுக- பாஜக கூட்டணி ‘மிதப்பில்தான்’ இருக்கு.. இதை ‘காலி செய்யுறது’க்குன்னு செந்தில் பாலாஜி ஒரு ‘ஸ்கெட்ச்’ போட்டிருக்கிறாராம்.
‘ஸ்கெட்ச் போடுறது’ல்ல கில்லாடியாச்சே..
திமுக தலைமையிடம், “கரூரில் இந்த முறை நிற்காமல் கொங்கு பெல்ட்டில் ஒரு தொகுதியில் நானே போட்டியிடுகிறேன்.. அப்படி போட்டியிட்டால் அதிமுக-பாஜகவை ‘மிரட்டிவிட’ முடியும்.. எனக்கு பதிலா கரூரில் ஒரு ‘நல்ல கேன்டிடேண்ட்டை’ போட்டுவிடலாம்” என சொன்னாராம் செந்தில் பாலாஜி.
ஓஹோ.. நல்லாத்தான் இருக்கு…
இதுல புது அப்டேட் என்னான்னா, 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போதே, கரூர் தொகுதியில் தம்பி அசோக்தான் எல்லாத்தையும் பார்த்துக்கிறாருன்னு ஸ்டாலினிடம் செந்தில் பாலாஜி சொல்லி இருந்தாரு… அப்ப, அசோக்கிடம், ‘தேர்தலில் நிக்கிறதுக்கு விருப்பம் இருக்கான்னு’ ஸ்டாலின் கேட்டிருந்தாரு.. ஆனால், அண்ணன் இருக்கிறதால வேண்டாம்னு சொல்ற மாதிரி அசோக் சொல்லிவிட்டாரு.. இப்ப கரூர் முப்பெரும் விழாவுக்கு வந்தப்பவும், சிஎம் ஸ்டாலின் அதே மாதிரி ஒரு கேள்வியை கேட்டுட்டு போயிருக்காரு.,.. அதனால கோவையில் ஒரு தொகுதியில் செந்தில் பாலாஜியும் கரூரில் அவர் தம்பி அசோக்கும் நிற்கலாம்னு சொல்றாங்கப்பா.. இதனால உடன்பிறப்புகள் செம்ம உற்சாகத்தில் இருக்காங்க” என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.