அதிமுக- பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ராஜபாளையம் பொதுத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜான் பாண்டியன், இதுவரை தனித் தொகுதிகளில் போட்டியிட்ட எனக்கு இந்த முறை ராஜபாளையம் பொதுத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியா? தாமரை சின்னத்தில் போட்டியா? என்பது பின்னர் தெரிவிக்கிறேன் என்றார்.
