தெற்கு பிலிப்பைன்ஸ் தீவான மிண்டானாவோவின் கிழக்கு கடற்கரையில் 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று (அக்டோபர் 10) அதிகாலை ஏற்பட்டுள்ளது
கடந்த வாரம் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 60-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள விசாயாஸ் மாகாணத்தின் செபு நகரத்தில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் அதிர்ந்தன. இதனால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் தெற்கு பிலிப்பைன்ஸ் தீவான மிண்டானாவோவின் கிழக்கு கடற்கரையில் 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதில் மக்கள் வீதிகளில் பெரும் அச்சத்துடன் தஞ்சம் அடைந்துள்ளனர்.