தம்மை பற்றி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை புகார் கொடுத்துள்ளது பற்றி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறியதாவது: ஆட்சியில் பங்கு பத்தி நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன். திரும்பத் திரும்ப அதையே கேட்டுட்டு இருக்கீங்க. 17-ஆம் தேதி தலைமையோட உட்கார்ந்து பேசிட்டுதான் வந்தோம்.
காங்கிரஸ் கட்சி தமிழகத்தோட நன்மைக்காக இருக்கப்போகுது. இந்தியா கூட்டணி தமிழகத்தோட நன்மைக்காகப் போராடுறோம். எங்களைப் பொறுத்தமட்டிலும் இந்த போராட்டம் தமிழக முதல்வர் சொல்லியிருந்த மாதிரி இது டெல்லிக்கு எதிரான தமிழகத்தின் போராட்டம். தமிழ்நாடு வெர்சஸ் டெல்லிங்குறதுதான்.. எங்களைப் பொறுத்தமட்டில் நம்பிக்கை இருக்கு, மிக முக்கியமான இந்தத் தேர்தல்ல தமிழகம் வெற்றி பெறும். இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறினார்.
கார்கேவிடம் உங்களைப் பற்றி செல்வப்பெருந்தகை புகார் கொடுத்தது பற்றிய கேள்விக்கு, “அதெல்லாம் அண்ணனை பொறுத்தவரைக்கும் ஒன்னும் பிரச்சினை இல்லை. அண்ணனுக்கும் தம்பிக்கும் பெரிய பிரச்சனை ஒன்னும் இல்லை” என்று பதிலளித்தார் மாணிக்கம் தாகூர்.
