ரஜினியிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட ஆதவ் அர்ஜூனா

Published On:

| By Kavi

ரஜினிகாந்திடம் தவெக மூத்த நிர்வாகி ஆதவ் அர்ஜூனா மன்னிப்பு கோரியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் பயணம் தொடர்பாக ஆதவ் அர்ஜூனா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

ADVERTISEMENT

அவருக்கு கண்டனம் தெரிவித்து ரஜினி இன்று அறிக்கை வெளியிட்டார்.  அதில் உண்மைக்கு மாறான கருத்தை ஆதவ் அர்ஜூனா கூறியிருக்கிறார். காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என்று தெரிவித்திருந்தார் ரஜினி.

இந்தநிலையில்   இன்று (மார்ச் 17) இரவு கொளத்தூர் தொகுதியில் நடந்த தவெக கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா,  

ADVERTISEMENT

 “ரஜினி சார் அவர்களுக்கு நான் பதிவு செய்யக்கூடியது… அப்படி உங்களுக்கு நான் சொல்ல வந்த நோக்கம் வேறு; உங்களுக்கு வருத்தம் ஏற்பட்டிருந்தால், என்னுடைய வருத்தத்தையும், என்னுடைய மன்னிப்பையும் பகிரங்கமாக நான் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் நீங்கள் வயதில் மூத்தவர். அதற்கான தார்மீகக் கடமை இருக்கிறது. நான் வேறு யாருக்கும் பதில் கொடுப்பதற்கு இங்கு வரவில்லை. அவருடைய அறிக்கையைப் படித்தேன், அவருக்கு ஒரு உணர்வு ஏற்பட்டிருக்கிறது, அந்த உணர்வுக்கு மதிப்பளிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share