ADVERTISEMENT

மது கிடைக்காத விரக்தியில் மனோரமாவின் மகன் தற்கொலை முயற்சி?

Published On:

| By Balaji

மது அருந்த முடியாத விரக்தியில் நடிகை மனோரமாவின் மகன் தற்கொலை முயற்சி செய்து கொண்டதாக வெளியான தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனித்துவமான தனது நடிப்புத் திறமையால், தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகை மனோரமா. தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்த இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

ADVERTISEMENT

ஆச்சி என்று தமிழ் சினிமாவில் போற்றி புகழப்படும் மனோரமாவிற்கு ‘பூபதி’ என்ற மகன் உள்ளார். பூபதி பிறந்த சில நாட்களிலேயே மனோரமாவின் கணவர் அவரை விட்டு பிரிந்து சென்றதால் தன் மகனுக்காகவே அவர் வாழ்ந்து வந்தார்.

விசுவின் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் பூபதி அறிமுகமானார். அதன் பின்னர் சில படங்களில் அவர் நடித்திருந்தாலும் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. சென்னை தியாகராய நகரில் தற்போது வசித்து வரும் பூபதி மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

ஊரடங்கு உத்தரவால் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் எங்கும் மதுபானங்கள் கிடைக்காமல் இருக்கிறது. மது பழக்கத்திற்கு ஆளானவர்கள் பலரும் இதன் காரணமாக கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

ADVERTISEMENT

இந்தநிலையில் மது அருந்த இயலாமல் தவித்த பூபதி போதையாக வேண்டும் என்பதற்காக தூக்க மாத்திரைகளை அதிக அளவு உட்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்துத் தெரியவந்ததும் அவரது குடும்பத்தினர் பூபதியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.

ஊரடங்கின் காரணமாக மது கிடைக்காமல் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் தற்கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நடிகை மனோரமாவின் மகன் தூக்க மாத்திரை சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share