தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று அக்கட்சித் தலைவர் நடிகர் விஜய் தலைமையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் தவெக உறுப்பினர் சேர்க்கைக்கான MY TVK என்ற செயலி (App) அறிமுகப்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் சட்டமன்ற தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டுகின்றன. தமிழக வெற்றிக் கழகமும் உறுப்பினர் சேர்க்கை, மாநில மாநாடு என தீவிரமாக இறங்கி இருக்கிறது.

இந்த நிலையில் தவெகவின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையை அடுத்த பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்துக்கு கட்சித் தலைவர் நடிகர் விஜய் தலைமை வகிக்கிறார்.
இன்றைய கூட்டத்தில், மதுரையில் ஆகஸ்ட் 25-ந் தேதி நடத்த திட்டமிட்டுள்ள மாநில மாநாடு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் இன்றைய கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான MY TVK என்ற App அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
கடந்த 20-ந் தேதியே இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட இருந்தது. ஆனால் இதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அப்போது அறிமுகப்படுத்தப்படவில்லை.