சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69ஆவது பொது குழு கூட்டத்தில் இன்று (செப்டம்பர் 21) நடிகர் வடிவேலு கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் பேசுகையில், ” நமக்குள் ஒற்றுமை இருக்க வேண்டும். பெரிய கலைஞர்கள், சின்ன கலைஞர்கள் என்று பார்க்காமல் யூடியூப் ஒன்றை வைத்துக்கொண்டு நமது கலைஞர்களை தவறாக பேசி, சிறிய விஷயத்தை கூட ஊதி பெரிதாக்கி விடுகின்றனர். இதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது.
இன்றும் நிறைய யூடியூபர்ஸ் இருக்கிறார்கள். அவர்களுக்கும் சீக்கிரம் நடிகர் சங்கம் சார்பில் ஆப்பு வைக்க வேண்டும். இந்த படத்தை பற்றி பேசு.. அந்த படத்தை பற்றி பேசு என்று தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் சிலர் இதை செய்கின்றனர். இதற்கு நடிகர் சங்கத்திலும் சிலர் உடந்தையாக இருக்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.
ஆனால் இந்த விஷயத்தை நடிகர் சங்கத்தில் இருக்கும் யாரும் கண்டிப்பதில்லை. இப்படி பேசி வருபவர்களை போர்க்கால அடிப்படையில் உண்டு.. இல்லை என்று ஆக்க வேண்டும்.
நடிகர் சங்கம் என்பது நடிகர்களை பாதுகாக்க தான். திரைக்கு வெளியிலும் விட்டு வைக்காமல் படம் ஓடிக் கொண்டிருக்கும்போது விமர்சனம் எடுக்கிறார்கள். சினிமாவை பத்து பேர் சேர்ந்து அழித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முடிவு கட்ட வேண்டும். அவதூறு பரப்புவோரை தூங்க விடாமல் நடிகர்கள் ஒன்று சேர்ந்து அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.