காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என ஆத்வ் அர்ஜுனாவுக்கு நடிகர் ரஜினி பதிலடி கொடுத்துள்ளார்.
ஆதவ் அர்ஜுனா கடந்த சில தினங்களுக்கு முன் போராட்டம் ஒன்றில் பேசியபோது ரஜினிகாந்த் அரசியலுக்கு வர நினைத்த நிலையில் திமுகவின் மிரட்டலுக்க பயந்து அரசியல் பயணத்தை கைவிட்டதாக தெரிவித்தார். அவரது பேச்சுக்கு ரஜினி ரசிகர்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் , “தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.
அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் ரகுபதி, தொல்.திருமாவளவன், எஸ்.பி.வேலுமணி, நண்பர் அண்ணாமலை, அர்ஜுனமூர்த்தி, அன்புமணி ராமதாஸ், ஜி.கே. வாசன், ஜான் பாண்டியன், புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், அமீர், ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள், மற்றும் நக்கீரன் கோபால், சாணக்கியா ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” என தெரிவித்துள்ளார்.
