விஜய்.. ‘மூன்றாம் மனுஷி’ திரிஷா.. நடிகர் பார்த்திபன் விமர்சனம்.. வீடியோ வெளியீடு

Published On:

| By Mathi

Parthipan Trisha

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யுடன் நடிகை திரிஷா ஒரே நிற உடையில் ஒரே காரில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றதை இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் விமர்சித்துள்ளார்.

திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பார்த்திபனிடம், திரிஷாவின் போட்டோவை காட்டி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு, ‘குந்தவையை வீட்டிலேயே குந்தவையுங்க’ என சொல்லி இருந்தார்.

ADVERTISEMENT

விஜய்யுடன் ஒரே நிற உடையில் ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றதை சுட்டிக் காட்டி வீட்டுக்குள் குந்த வையுங்க (உட்கார வையுங்க) என பார்த்திபன் கூறியிருந்தார்.

இதற்கு திரிஷா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதேநேரத்தில் பார்த்திபனும் தமது கருத்துக்கு வருத்தம் தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் திரிஷாவின் கடுமையான விமர்சனங்களுக்கு பதிலடியாக பார்த்திபன் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது: திரிஷாவை நான் பாராட்டணும்னு நினைச்சேன். இந்த நேரத்துல ஒரு திரைப்பட நட்சத்திரம்… எல்லாத்தையும் மீறி முன் வந்திருக்கிற திரிஷாவுக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

என்னதான் நம்ம ஷார்ப்பா புத்திக் கூர்மையா மைக்ல பேசினாக்கூட மைக்ல பேசிறதுனால அது புத்திசாலித்தனம் ஆயிடாதுங்கிற ஒரு பழி என்மேல இருக்கு. அதனால நான் ஒருவேளை முட்டாள்தனமா பேசினாக்கூட அத புத்திசாலித்தனமா டிரான்ஸ்லேட் பண்ணிக் கொடுக்க வேண்டியது உன்னுடைய பொறுப்பு. ஓகே.. டீல்! (பார்த்திபனுக்கு கண்டனம் தெரிவித்த திரிஷா, ”மைக்கில் பேசிவிட்டால் ஒரு கருத்தை அறிவார்ந்தது அல்லது நகைச்சுவையானது என மாற்றிவிடாது. அது முட்டாள்தனத்தை உரக்கச் சொல்ல மட்டுமே உதவும்” என கூறியிருந்தார்.)

ADVERTISEMENT

தவறு என்பது தவறி செய்வது.. தப்பு என்பது தெரிந்து செய்வது. தவறு செய்தவன் திருந்தப் பாக்கணும்.. தப்பு செய்தவன் வருந்தியாகணும்.

அதே மாதிரிதான் நான் வருத்தம் தெரிவிக்கிறேன்னு சொல்றது ஒரு விதம், மன்னிப்புக் கேட்கிறேங்கிறது இன்னொரு விஷயம். ஒரு நிகழ்ச்சியில ஒரு தவறு நடந்துட்டதாக நான் உணர்றேன். உண்மையிலேயே அது தவறிதான் நடந்தது.

நான் மேடையில வந்து மிஸ்டர் விஜய்யைப் பத்தியோ, அஜித்தைப் பத்தியோ பேசிட்டே இருக்கும்போது திடீர்னு வேற ஒரு போட்டோ வந்தது. அந்த போட்டோவைப் பார்த்த உடனே நான் என்ன பேசறதுன்னு எனக்குத் தெரியல.. உண்மையிலேயே கொஞ்சம் திகைச்சுப் போயிட்டேன்.. அதான் உண்மை.

குற்றம் சுமத்துற மாதிரி அவங்களுடைய போட்டோவைப் போட்டு நான் பேசணும்னு ஆசைப்பட்டேங்கிறது 100 சதவீதப் பொய். அப்படி நான் யார்கிட்டயும் அடிமை இல்ல.. யார்கிட்டயும் காசு வாங்கிக்கிட்டு அப்படி ஒரு நிகழ்ச்சிக்குப் போகவும் இல்ல. இப்ப இல்ல என்னுடைய மரணம் வரைக்கும் நான் அதைச் செய்யப் போறதில்லை.. காசு வாங்கிட்டு எந்தக் கட்சியிலும் போய் சேரப் போறதில்லை. காசுக்காக நான் எந்தத் தவறும் செய்யப் போறதில்லை.

அப்படியே ஒருவேளை இந்த போட்டோவைப் போடுங்க நான் பேசறேன்னு சொன்னா, ஒரு மகளிர் தினத்தன்று நான் யாரையெல்லாம் சொல்லணும்.. ஒரு வேலுநாச்சியாரைப் பற்றிப் பேசலாம்னு ஆசைப்படலாம்.. டயானா சார்லஸைப் பற்றிப் பேசணும்னு ஆசைப்படலாம்.. நான் எப்பவுமே பேசுகிற மதர் தெரசா அவர்களைப் பற்றி நான் மறுபடியும் ஒரு தடவை பேசறேன்னு ஆசைப்படலாமே தவிர இப்படி நான் ஆசைப்பட்டேன்னு சொல்றது வந்து சரியில்ல. ஓகே.

அப்படி அந்த போட்டோவைப் பார்த்த உடனே எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியாதப்போ பக்கத்துல இருந்து குந்தவை குந்தவைன்னு பிரியங்கா சொல்லிட்டே இருந்தாங்க. ஏன்னா அந்த பொன்னியின் செல்வன்ல அந்த கேரக்டரா இருந்ததுனால.

எனக்குத் டக்குன்னு அது ஒரு வார்த்தை ஜாலமா என்ன தோணுச்சு அப்படிங்கறதை மீறி, அந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும்போது கலைவாணர் அரங்கத்துல இன்னும் ஒரு அரை மணி நேரம் இங்க உட்காருங்கன்னு சொல்லும்போது நான் உட்கார்ந்து மொபைலை நோண்டிட்டு இருந்தேன்.

அப்போ வலைப்பேச்சுல இருக்குற அந்தணன் அவர்கள் வந்து சொல்லிட்டு இருந்தாரு.. இதே நிகழ்ச்சியைப் பத்திச் சொல்லிட்டு இருந்தாரு. இப்ப வந்து விஜய் எவ்வளவு உயரத்துக்குப் போயிருக்காரு, அடுத்து அவர்தான் என்கிற அளவுக்கான ஒரு பெரிய உயரத்தை அடையப் போகும்போது இந்தப் பெண்மணி என்ன பண்ணியிருக்கணும்? இந்தப் பெண்மணிக்கு 40 வயசாயிடுச்சு.. 40 வயசுக்கு மேல ஆயிடுச்சு.. அவங்களாவது என்ன பண்ணியிருக்கணும்? ‘நான் வரலப்பா நீ போயிட்டு வா, இதனால ஒரு இமேஜே கெட்டுப்போயிடும்’னு சொல்லியிருக்கணும். அவங்க வீட்டிலேயே இருந்து அவரை அனுப்பி வச்சிருந்தா நல்லா இருக்குமேன்னு..

இந்த மாதிரி நிறையப் பேர் பேசறாங்க.. அதுல ஒரு பத்திரிகையாளர் கூட என்கூடப் பேசும்போது என்ன சொன்னாருன்னா, ‘மேட்சிங் புடவையே வாங்கி கொடுத்தாக்கூட அந்தப் புடவையைக் கட்டிட்டு நான் வீட்ல இருக்கிறேன், நீங்க போயிட்டு வாங்கன்னு சொல்லியிருக்கணும்’.. இப்படி நிறையச் செய்திகள் வந்துகிட்டே இருந்தது.

உண்மையான விஷயமே என்னன்னா, விஜய் அவர்கள் கிட்டத்தட்ட ஒரு நிறைய விஷயங்களைக் கடந்து அரசியல்ங்கிறது சாதாரணமான விஷயம் இல்லை.. நிறையப் போராட்டங்களைச் சந்திக்க வேண்டியதா இருக்கும். அதையெல்லாம் சந்திச்சு கடந்து வந்துட்டு இருக்கும்போது கரூர் பிரச்சனையில கூட அவருக்கு ஏற்படாத ஒரு பெரிய.. கரூர் பிரச்சனையில விமர்சனங்கள் வந்ததே தவிர அவருக்கு இவ்வளவு பெரிய பாதிப்பு வராத அளவுக்கு இருந்தது. இவ்வளவு பாதிப்புக்கும் காரணமான ஒரு நிகழ்ச்சி, அந்த நிகழ்ச்சியில இந்தப் பெண்மணி கலந்துக்காம இருந்திருக்கலாம் அப்படிங்கிறது என்னுடைய அடிமனசுல இருந்தது.

ஆனா அதை நான் சொல்றதுக்காக அந்த மேடைக்கு போகல. அந்த மேடைக்கு நான் எதுக்காக போனேன், அங்க யாரெல்லாம் பேச இருந்தாங்க.. ஏன்னா அது என்கிட்ட ப்ரீ பிளான்ட் விஷயம், என் கையில கொடுக்கப்பட்டது. அதைப்பத்தி நான் அடுத்த விஷயத்துல சொல்றேன். அதனால எனக்கு இவங்க போட்டோவைப் போட்டு பேசணுங்கிற அளவுக்கு ஒரு பெரிய லட்சியமெல்லாம் எனக்குக் கிடையாது.

குந்தவை குந்தவைன்ன உடனே இவங்க வீட்டிலேயே குந்த வச்சிருக்கலாம்.. வெளியில வந்ததுனால பாருங்க எவ்வளவு பெரிய பிரச்சனை ஆயிடுச்சுங்கிறது ஒரு பெரிய ஆதங்கம்.. உண்மையிலேயே பெரிய ஆதங்கம் அவ்வளவுதான்.

அதனாலதான் நண்பர் சமுத்திரக்கனி கூட அவர் பேசும்போது ‘நீ வந்து யார்கிட்ட உன்னுடைய ஈகோவை காட்டுற? எதுக்காக இவ்வளவு பெரிய ஈகோ? யாரை மிரட்டப் பார்க்கிற நீ? எதுக்காக..’ அப்படின்னு அவர் பேசுனது வந்து அவரும் காசு வாங்கிட்டு பேசல. அவரும் ஒரு ஆதங்கத்துல ஒரு அன்பின் மிகுதியிலதான் அவரை அறியாம பேசுற ஒரு விஷயமும்.

இதெல்லாம் நான் பார்த்துட்டு இருந்தது அன்னைக்கு நான் போய் பேசிட்டு இறங்கி வந்ததுக்கப்புறம் நண்பர் பாண்டே அவர்கள் சொன்னாரு.. அந்த குந்தவை விஷயத்தை மட்டும் நீங்க தவிர்த்திருக்கலாம்ன்னு.. ‘ஏன் சார்?’ அப்படின்னு கேட்டேன்.. ‘நீங்க பாருங்க நாளைக்கு பாருங்க’ன்னாரு.

நான் உடனே இது எதுக்கு.. நான் எப்பவுமே இந்த பிரச்சனைகளை விரும்பாதவன். அது எந்த பிரச்சனையா இருந்தாலும் அதுக்கு உடனே ஒரு தீர்வு வந்துடணும்னு உடனே கலாட்டாவுல இருக்குற அவங்க அருணா மேடம்க்கு போன் பண்ணி அவங்களுக்கு மெசேஜ் அனுப்புனேன். ராத்திரி ரொம்ப நேரம் ஆயிடுச்சு அப்போ நான் உங்களுக்கு கூப்பிடக் கூடாதுங்கிறதுக்காக மெசேஜ் அனுப்பி ‘தயவு செய்து அதை டெலீட் பண்ணிடுங்க.. அது எதுமான எதிர்விதமான விஷயத்தை எதுவும் ஏற்படுத்திட வேண்டாம்’னு சொல்லிட்டு சொல்லிட்டு காலையில பார்க்கிறேன்.. காலையில பார்த்தா வேற ஏதோ ஒரு வீடியோ மூலமாக அது வெளியாகி இருந்தது.

அது என்ன மாதிரியான ஒரு பெரிய பாதிப்பை போகப் போக ஏற்படுத்திச்சுன்னா.. நான் சொன்னது வந்து ஒரு பெண்மணியைப் பத்தி.. ஒரு மூணாவது மனுஷியைப் பத்தி.. எனக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு மூணாவது மனுஷியைப் பத்தி. இந்தப் பிரச்சனையில மொத்தம் மூணு பேருன்னு எடுத்துக்கிட்டா முதல்ல வந்து என்னுடைய அன்பு நண்பர் விஜய்.. அவருடைய வளர்ச்சியைப் பார்த்து நான் ரொம்பச் சந்தோஷப்படுற ஒரு நண்பர். ரெண்டாவது இடத்துல அவருடைய மனைவி இருப்பாங்க.. இன்னுமே கோர்ட் தீர்மானிக்காத வரைக்கும் இப்ப வரைக்கும் அவங்க மனைவிதான். அந்த முக்கியமான ஸ்தானத்துல தான் அவங்க இருக்காங்க.

சோ இந்த மூணாவது மனுஷியைப் பத்தி நான் பேச வேண்டிய அவசியமில்லை. ஆனா நான் சொன்னது மூணாவது மனுஷியைப் பத்தி.. அவங்களை வீட்ல இருந்திருக்கலாம்னு.. ஆனா இது எல்லாமே பெண்களுக்கு எதிரான ஒரு விஷயம், பெண்கள் எல்லாமே வீட்டுக்குள்ளேயே இருங்க அப்படின்னு சொன்ன மாதிரி ஒரு கருத்தை வந்து நிறையப் பேர் அதைப் பதிவு செஞ்சதுக்கப்புறம் எனக்கு ஒரு கஷ்டம் வந்துருச்சு.

அவரு பாண்டே சொன்ன மாதிரி இதை நம்ம தவிர்த்திருக்கலாம்.. தவறு நடந்துருச்சுன்றதுக்காக நான் உடனடியாக அதை வந்து ஒரு பேட்ல எழுதி.. இந்த எழுதுற பழக்கம் என்னன்னா நம்ம பேசும்போது இப்ப நான் பேசும்போது தவறிப் போய் ஏதாவது வார்த்தைகள் வந்துரலாம்.. அது வரக்கூடாதுங்கிறதுக்காக ப்ராப்பரா எழுதி அதை ரெக்கார்ட் பண்ணி வச்சுக்கிட்டு ஒரு ஏஐ மூலமா ஒரு வீடியோ செய்றதுக்காக முற்பட்டு மத்தியானமே இந்த ரெக்கார்டிங் எனது முடிஞ்சு போச்சு.. என்னுடைய வருத்தம் தெரிவிக்கிற ரெக்கார்டிங்.

ஆனா அது ஏஐ முடியறதுக்கு ராத்திரி 8 மணியோ 9 மணியோ ஆயிடுச்சு. இதெல்லாம் நான் பதிவு பண்ணிப் போடும்போது பை த டைம் எனக்கு அந்த ட்வீட் ஒன்னு வருது. அந்த ட்வீட்ல வந்து ஆர்கனைசர்ஸ் வந்து சொன்னாங்க.. எனக்கு இந்த மாதிரி இவரே விரும்பி அந்த போட்டோவை போடச் சொல்லி அப்படின்னெல்லாம் வந்தவுடனே நான் வருத்தம் தெரிவிச்சது ரொம்ப சின்சியரா மனப்பூர்வமாதான் தெரிவிச்சேனே தவிர இப்படி ஒரு ட்வீட் வரப்போகுதுன்னு தெரிஞ்சா நான் வருத்தமே தெரிவிச்சிருக்க மாட்டேன்.

அதைப் பார்த்ததுக்கப்புறம் எனக்கு மனசுல ஏற்பட்ட விஷயம் இன்னைக்கு நான் இப்படி ஒரு வீடியோவை பண்ணணுங்கிற ஒரு உத்வேகத்தை எனக்கு ஏற்படுத்தியிருக்கு.

ஹாய் ஃப்ரண்ட்ஸ்.. இது சற்றே நீண்ட பதிவுதான். காரணம் ஒரு மூணாவது மனுஷியோட ஒரு மூன்றாம் தரமான ட்வீட்.. அது எனக்குள்ள ஏற்படுத்தின ஒரு பாதிப்பு. என்னுடைய செயலுக்கு அவங்க கருத்து தெரிவிக்கக் கூடாது.. எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாதுன்னு நான் சொல்லல. ஆனா சமீப காலங்கள்ல அவங்களைப் பத்தி வந்த கொச்சையான மிக அசிங்கமான நிறையக் கருத்துக்கள் இங்க இருக்கு பொதுவெளியில இருக்கு. ஒரு கட்சியோட தலைவர் உட்பட அவங்களைப் பேசுன விஷயங்களுக்கு விமர்சனங்களுக்கு எல்லாத்துக்குமே அவங்க பதில் சொல்லியிருந்தாங்கன்னா நான் இதை வரவேற்றிருப்பேன்.

எதுக்குமே சொல்லாம எனக்கு மட்டுமே அவங்க கண்டனத்தைத் தெரிவிச்சதுனால நான் வந்து வருத்தம் தெரிவிக்கிறேன்னு சொன்னதே தப்புன்னு நிறையப் பேர் கண்டனம் தெரிவிச்சிருக்காங்க.. ‘நீங்க ஏன் சார் வந்து அதுக்கு வருத்தம் தெரிவிக்கணும்? நீங்க ஏன் அதை மன்னிப்பு கேட்கணும்?’. அதுல நிறைய குரூப் ஆரம்பிச்சிருக்காங்க.. ‘வி ஸ்டாண்ட் வித் பார்த்திபன்’ (We stand with Parthiban) ஒரு ஹேஷ்டேக் எல்லாம் ஆரம்பிச்சிருக்காங்க.. அந்த நண்பர்கள் எல்லாருக்கும் நன்றி. காரணம் இது என் நன்மைக்குப் பக்கத்துல நீங்க இல்ல.. உண்மைக்குப் பக்கத்துல இருக்கீங்கன்றதுக்காக நான் உங்களைப் பாராட்டுறேன். இவ்வாறு பார்த்திபன், வீடியோவில் தெரிவித்துள்ளார்.

வீடியோ:

குந்தவை-மனதில் குந்த வை!       Radhakrishnan Parthiban | R Parthiban | Trisha Krishnan | Vijay | TVK
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share