ஆபத்தானவர்கள் கையில் நாடு : பிரதமர் மோடியை விமர்சித்த நடிகர் கிஷோர்

Published On:

| By Kavi

எனக்கு மட்டும் டைம் மிஷின் கிடைத்தால் பின்னோக்கிச் சென்று பிரதமரை மாற்றிவிடுவேன் என்று நடிகர் கிஷோர் கூறியுள்ளார். 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பிஸியாக இருப்பவர் நடிகர் கிஷோர்.

ADVERTISEMENT

பொல்லாதவன் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே கவனம் பெற்ற கிஷோர், ஆடுகளம், காந்தாரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

விசாரணை, வடசென்னை போன்ற வெற்றிமாறன் திரைப்படங்களிலும் குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடத்தியிருக்கிறார்.

ADVERTISEMENT

இந்நிலையில் கிஷோர் நடிப்பில் உருவாகி இருக்கும் மெல்லிசை திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதையொட்டி இந்தியா கிளிட்ஸ் தமிழ் யூடியுப் சேனலுக்கு பேட்டி பேட்டியளித்தார்.

ADVERTISEMENT

அப்போது ஜனநாயகன் திரைப்படம் சென்சார் சிக்கலில் இருப்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த படத்துக்காக திரை துறையில் இருப்பவர்கள் சிலர் ஒரு கடமைக்காக ட்வீட் போட்டிருக்கிறார்கள் என்றும் திரைத்துறையில் இருந்து வலுவான ஆதரவு கிடைக்கவில்லை என்றும் சொல்கிறார்களே என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அவர், ‘அரசியல் என்பது அதிகார பதவி போல் ஆகிவிட்டது. ஆனால் அது அதிகார பதவி கிடையாது. மக்களுக்காக வேலை செய்கிற ஒரு சேவகன்.

முன்னாள் பிரதமர் நேருவும் இதைதான் சொல்லி இருக்கிறார். அதாவது நான் தான் முதன்மை சேவகன் என்று சொல்லி இருக்கிறார்.

பிரதமர் மோடி நான் தான் பிரதம சேவகன் என்று சொல்கிறார். மக்களுக்கு சேவை செய்வதற்காக எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு இருக்க வேண்டும்.

தற்போது ஜனநாயகம் தவறாக வழிநடத்தப்படுகிறது. வெறுப்புணர்வுகள் அதிகமாகி விட்டன’ என்றார்.

அவரிடம் டைம் மெஷின் கிடைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பியதற்கு,

‘வாழ்க்கையில் பின்னால் போகும் வாய்ப்பு இருந்தால் 2014 ஆம் ஆண்டுக்கு சென்று பிரதமரை மாற்றி விடுவேன். இந்தியாவே மாறி இருக்கும். இப்போது ஆபத்தான நிலைமையில் நாடு இருக்கிறது. நம் நாடு மட்டுமல்ல, பல நாடுகள் அப்படிதான் இருக்கின்றன. இன்று ட்ரம்பையே எடுத்துக்கொள்ளுங்களேன். இப்படியே போனால் இதை மாற்றுவதற்கு பல ஆண்டுகள் ஆகிவிடும்.

வெறுப்புணர்வை முதலீடாக வைத்து ஆட்சி நடத்துபவர்கள் ரொம்ப ஆபத்தானவர்கள். அன்பு இல்லை என்றால் இங்கு எதுவுமே இல்லை” என்று கூறியுள்ளார்

கிஷோர் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share