மலையாளத்தில் அறிமுகமாகும் கதிர்!

Published On:

| By uthay Padagalingam

actor kathir introducing mollywood with meesha

மறைந்த விக்ரம் சுகுமாரனின் ‘மத யானை கூட்டம்’ படத்தில் நாயகனாக அறிமுகமானவர் கதிர். கிருமி, விக்ரம் வேதா படங்களில் கவனம் ஈர்த்தவர், மாரி செல்வராஜின் முதல் படமான ‘பரியேறும் பரிமாள்’ வழியே மிகப்பெரிய அளவில் ரசிகர்களைப் பெற்றார். ஆனால், தொடர்ந்து அவர் நடித்த சிகை, ஜடா, சர்பத் படங்கள் பெரிய கவனிப்பைப் பெறவில்லை. அதனைச் சரி செய்யும் விதமாக ’சுழல்’ வெப்சீரிஸின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் அமைந்தன. actor kathir introducing mollywood with meesha

இந்தச் சூழலில், அவர் மலையாளத்தில் அறிமுகமாகிற ‘மீசா’ படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

சௌபின் ஷாகிர், சூரஜ் வெஞ்சாரமூடு நடிப்பில் வந்த ‘விக்ருதி’யை இயக்கிய எம்ஸி ஜோசப் இதனை இயக்கியுள்ளார்.

’நட்பைக் கலப்பது ரத்தத்தைக் கலப்பதற்குச் சமானம்’ என்கிற வில்லியம் ஷேக்ஸ்பியரின் மேற்கோளோடு டீசர் தொடங்குகிறது.

கோபம், மூர்க்கம், அதிகார வேட்கை, அடிபணிய வைத்தல் என்று நட்பு மற்றும் பகையை ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்று காட்டுகிறது இந்த டீசர்.

இதில் ஷைன் டாம் சாக்கோ, ஹகீம் ஷா, சுதி கோப்பா, ஸ்ரீகாந்த் முரளி, ஜியோ பேபி ஆகியோரோடு கதிர் நடித்திருக்கிறார். இரவல் குரல் என்றபோதும் மலையாளம் பேசி நடித்திருப்பது தெரிகிறது.

முழுக்கச் சேவல் பண்ணையில் புகுந்த உணர்வைத் தரும் இந்த டீசர், இந்த ஆண்டின் மிக முக்கியமான படங்களில் ஒன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கூடவே, கதிர் மீதான புகழ் வெளிச்சத்தையும் இரட்டிப்பாக்கினால் நல்லது..!

Meesha - Official Teaser | Emcy Joseph | Kathir | Shine Tom Chacko | Hakim Shah
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share