ADVERTISEMENT

சுகுணா சிக்கன் நிறுவன அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!

Published On:

| By Pandeeswari Gurusamy

Action raid at Suguna Chicken Company offices

பிரபல சுகுணா சிக்கன் நிறுவனத்திற்கு தொடர்புடைய கோவை, உடுமலைபேட்டை பகுதிகளில் உள்ள இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு செயல்படுவது பிரபல சுகுணா புட்ஸ் நிறுவனம். இந்நிறுவனம் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கோழி பண்ணைகள் மற்றும் கறிக்கோழி உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது.

ADVERTISEMENT

சுகுணா சிக்கன் நிறுவனத்தை சுந்தராஜன் மற்றும் சௌந்திரராஜன் சகோதரர்கள் நிர்வகித்து வருகின்றனர். இந்த நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் உட்பட முக்கிய அலுவலகங்கள் கோவையில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் முறையாக வருமான வரி செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டதாக கிடைத்த தகவலின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா புட்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம், பந்தய சாலை பகுதியில் சுகுணா குரூப் அலுவலகம் ஆகியவற்றில் இன்று (செப்டம்பர் 23) வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 9 கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 30க்கும் மேற்பட்டோர் அடங்கிய குழுவினர் இரு குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

இதே போல திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டையில் நேரு வீதியில் உள்ள சுகுணா புட்ஸ் நிறுவனத்தில், வருமானவரித் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த அலுவலகத்திற்கு வருமான வரித்துறை கமிஷனர் பெர்ணான்டோ தலைமையில் மூன்று கார்களில் வந்த 10 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

மேலும் சுகுணா புட்ஸ் அலுவலகத்தின் நிர்வாக அலுவலகம் மற்றும் ஈரோட்டில் உள்ள அலுவலகம் ஆகிய இடங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share