ஆவணி மாத நட்சத்திர பலன் – பூரட்டாதி! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

Published On:

| By Selvam

– யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

நிதானமாகச் செயல்பட்டால் நிம்மதி நிலைக்கும் காலகட்டம்.

அலுவலகத்தில் அவசரம் அலட்சியம் கூடவே கூடாது. இடமாற்றம் வந்தால் மறுக்காமல் ஏற்பதே நல்லது. சிலருக்கு அயல்நாட்டு வாய்ப்பு வரலாம், தவிர்க்க வேண்டாம்.

பணத்தை கவனமாகக் கையாளுங்கள்.

ADVERTISEMENT

வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். விட்டுக் கொடுத்துப்போனால், பிரிவும் ,குழப்பமும் வராமல் இருக்கும். வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் அக்கறை செலுத்துங்கள்.

செலவை முறைப்படுத்துங்கள். வேண்டாத சகவாசம் வீணான பிரச்னைக்கு வழிகாட்டும் உடனே உதறுங்கள். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும். புதிய முதலீடுகளில் அவசரம் வேண்டாம்.

ADVERTISEMENT

அரசுத்துறை சார்ந்தவர்கள் பொறுப்புகள் எதிலும் நேரடி கவனம் செலுத்துங்கள். கோப்புகளை கவனமாகக் கையாளுங்கள்.

அரசியல் சார்ந்தவர்கள் பொது இடங்களில் வீண் வாக்குறுதிகள் தரவேண்டாம்.

படைப்பாளிகள், முயற்சிகளில் முடங்குவது கூடாது.

மாணவர்கள் கவனத்தை ஒருநிலைப்படுத்துங்கள்.

பயணத்தில் சாலை விதிகளை மதிப்பது அவசியம்.

அலர்ஜி,காது,மூக்கு, தொண்டை,  உபாதைகள் வரலாம்.

சிவன்,பார்வதி வழிபாடு சிறப்பு சேர்க்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆவணி மாத நட்சத்திர பலன் -மகம்!  (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

ஆவணி மாத நட்சத்திர பலன் – பூரம்! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

ஆவணி மாத நட்சத்திர பலன் – சித்திரை!  (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

ஆவணி மாத நட்சத்திர பலன் – ஹஸ்தம்!  (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share