ரயில் டிக்கெட்டுகளை முதல் 15 நிமிடத்தில் முன்பதிவு செய்வோருக்கு ஆதார் எண் கட்டாயம் என்ற நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது.
ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் குவிந்தன. இதனையடுத்து ரயில் டிக்கெட் முன்பதிவுகளுக்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதில், ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் 15 நிமிடங்களில் ஆதார் எண்ணை இணைத்தவர்களுக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்படும். ரயில்வே இணையதளத்தில் ஆதார் எண்ணை இணைத்து பதிவு செய்திருந்தவர்களுக்கு மட்டுமே முதல் 15 நிமிட டிக்கெட்டுகள் கிடைக்கும்.
இதன் மூலமாக முகவர்கள் மொத்தமாக டிக்கெட்டுகளை புக் செய்யும் மோசடி தடுக்கப்படுகிறது. இந்த நடைமுறை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. இது ரயில் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவில் 15 நிமிடங்களுக்கு அனைத்து பயணிகளுக்கும் டிக்கெட் கிடைக்கும்.