இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. A rare feat awaits India in the history of IND VS ENG
கடந்த மூன்று போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் வென்று பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.
புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான இந்தியா அணியோ, வெற்றிக்கு மிக அருகில் வந்து தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டில் மைதானத்தில் நாளை (ஜூலை 23) நடைபெறும் முக்கியமான நான்காவது டெஸ்டில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா.
இதில் வென்றால் அல்லது டிரா செய்தால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்ற நெருக்கடி இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே காயம் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் ஆகியோர் காயம் காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இருவரும் கடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய நிலையில், அவர்களின் விலகல் அணிக்கு பின்னடைவாக உள்ளது.
அதேவேளையில் உலகின் முன்னணி டெஸ்ட் பந்து வீச்சாளராக கருதப்படும் ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான இந்த ஆட்டத்தில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும் கடந்த வாரம் விரல் காயத்தைத் தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த நாளைய போட்டியில் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
தொடரின் மூன்றாவது போட்டிக்குப் பிறகு 1-2 அல்லது 0-1 என்ற கணக்கில் பின்தங்கியிருக்கும் போது, ஒரு அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெல்வது மிக அரிதான சாதனையாக பார்க்கப்படுகிறது.
இதுவரை மூன்று முறை மட்டுமே இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
1998 இல் இங்கிலாந்து vs தென்னாப்பிரிக்கா (இங்கிலாந்து 0-1 என பின்தங்கியது)
1992/92 இல் மேற்கிந்திய தீவுகள் vs ஆஸ்திரேலியா (மேற்கிந்திய தீவுகள் 0-1 என பின்தங்கியது)
1936/37 இல் ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து (ஆஸ்திரேலியா 1-2 என பின்தங்கியது)
இந்த சாதனையை இந்திய அணி இதுவரை படைத்தது இல்லை.
இந்த நிலையில் 1-2 என்ற பின்தங்கியிருக்கும் சுப்மன் கில் தலமையிலான இந்திய அணி இந்த சாதனையை படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.