“இன்ஜினியரிங் படித்துவிட்டு ஐடி கம்பெனிக்கு வேலைக்குச் செல்வதை விட, பாதுகாப்புத் துறையில் நாட்டிற்காகப் பணியாற்றுவது கெத்து” என்று நினைக்கும் இளைஞர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. இந்தியாவின் மிக முக்கியப் பாதுகாப்பு அமைப்பான டிஆர்டிஓ (DRDO – Defence Research and Development Organisation) நிறுவனத்தில், தொழில்நுட்பப் பிரிவில் காலியாக உள்ள 764 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாதுகாப்புத் துறையில் வேலை என்பது வெறும் சம்பளத்திற்கான வேலை மட்டுமல்ல, அது ஒரு கவுரவம்!
பணிகள் என்ன?
டிஆர்டிஓ-வின் கீழ் செயல்படும் பல்வேறு ஆய்வகங்கள் மற்றும் மையங்களில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
முக்கியமாக இரண்டு பிரிவுகளில் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்:
- கேட்-பி (Graduate Apprentice Trainee): பொறியியல் பட்டதாரிகளுக்கானது.
- டெக்னீசியன் (Technician / Trade Apprentice): ஐடிஐ மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கானது.
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பின்வரும் படிப்புகளை முடித்திருக்க வேண்டும்:
- பொறியியல் பிரிவு: பி.இ (B.E) அல்லது பி.டெக் (B.Tech) படிப்பில் மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், சிவில் போன்ற பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தொழில்நுட்பப் பிரிவு: டிப்ளமோ (Diploma) இன்ஜினியரிங் அல்லது ஐடிஐ (ITI) படிப்பில் சம்மந்தப்பட்ட ட்ரேடில் (Trade) தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
2023, 2024 அல்லது 2025 ஆகிய ஆண்டுகளில் கல்லூரி படிப்பை முடித்து வெளியேறியவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களோ அல்லது ஒரு வருடத்திற்கு மேல் பணி அனுபவம் உள்ளவர்களோ இதற்கு விண்ணப்பிக்க முடியாது.
சம்பளம் (உதவித்தொகை):
இது ஒரு பயிற்சிப் பணி (Apprenticeship) என்பதால், மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும்.
- பட்டதாரிகளுக்கு: மாதம் ரூ.9,000.
- டிப்ளமோ முடித்தவர்களுக்கு: மாதம் ரூ.8,000.
- ஐடிஐ முடித்தவர்களுக்கு: அரசு விதிகளின்படி உதவித்தொகை வழங்கப்படும்.
தேர்வு முறை:
பெரிய அளவில் தேர்வுகள் எதுவும் கிடையாது. விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் (Merit List) தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின் பணி வழங்கப்படும். சில இடங்களில் சிறிய நேர்காணல் இருக்கவும் வாய்ப்புள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
விருப்பமுள்ளவர்கள் மத்திய அரசின் NATS (National Apprenticeship Training Scheme) இணையதளத்தில் (nats.education.gov.in) முதலில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் டிஆர்டிஓ இணையதளம் வழியாகக் குறிப்பிட்ட அறிவிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
“என்னது அப்ரண்டிஸ் தானா?” என்று சலித்துக்கொள்ள வேண்டாம். டிஆர்டிஓ போன்ற ஒரு பிரம்மாண்ட நிறுவனத்தில் ஒரு வருடம் பயிற்சி பெறுவது, பிற்காலத்தில் அங்கு வரும் நிரந்தர வேலைவாய்ப்புகளுக்கு (Scientist ‘B’, STA-B) உங்களுக்கு முன்னுரிமை பெற்றுத்தரும். அத்துடன், தனியார் நிறுவனங்களிலும் டிஆர்டிஓ சான்றிதழுக்குத் தனி மதிப்பு உண்டு!
