தமிழக காவல்துறையில் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் ஒரே நாளில் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் உட்பட 30 ஐஎபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு,
3 ஏடிஜிபிக்கள்
7 ஐஜிக்கள்
3 டிஐஜிக்கள்
15 எஸ்பிகள்
2 கூடுதல் எஸ்பிக்களுக்கு பதவி உயர் மற்றும் பணியிட மாற்றம் அளித்துள்ளது.
பதவி உயர்வு, பணியிட மாற்றம்
-சட்டம் & ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவ ஆசிர்வாதம், டிஜிபியாக பதவி உயர்வு பெற்று ஆயுதப்படை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சைபர் கிரைம் கூடுதல் டிஜிபியாக இருந்த சந்தீப் மிட்டல், பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த பால நாகதேவி, பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் டிஜிபியாகவும், கூடுதல் பொறுப்பாக சிவில் சப்ளை சிஐடியும் வழங்கப்பட்டுள்ளது.
சிபிசிஐடி ஐஜியாக இருந்த T.S. அன்பு, பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் (சிபிசிஐடி) ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தெற்கு மண்டலம் (மதுரை) ஐஜியாக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா, பதவி உயர்வு பெற்று ஆவடி மாநகர காவல் ஆணையராக (ஏடிஜிபி அந்தஸ்து) நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை சிபிஐயில் ஐஜியாக இருந்த தீபக் எம். தாமோர், ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று மத்திய அரசுப் பணியிலேயே தொடர்கிறார்.
மேற்கு மண்டலம் (கோவை) ஐஜியாக இருந்த T. செந்தில்குமார், பதவி உயர்வு பெற்று டிஜிபி அலுவலக தலைமையிட ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த அனிசா ஹுசைன், பதவி உயர்வு பெற்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறை நவீனமயமாக்கல் ஐஜியாக இருந்த நஜ்மல் ஹோடா, பதவி உயர்வு பெற்று கமாண்டோ படை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமையிட ஐஜியாக இருந்த மகேந்திர குமார் ரத்தோடு, பதவி உயர்வு பெற்று காவலர் நலன் பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆவடி மாநகர காவல் ஆணையராக இருந்த ஏடிஜிபி K. சங்கர், சிறைத்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமலாக்கப்பிரிவு சிஐடி ஏடிஜிபியாக இருந்த டாக்டர் A. அமல்ராஜ், தாம்பரம் மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறைத்துறை ஏடிஜிபியாக இருந்த டாக்டர் மகேஷ்வர் தயாள், தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தாம்பரம் மாநகர காவல் ஆணையராக இருந்த அபின்தினேஷ் மோடக், அமலாக்கப்பிரிவு சிஐடி ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
செயல்பாட்டுப் பிரிவு ஏடிஜிபியாக இருந்த டாக்டர் R. தினகரன், தமிழ்நாடு போலீஸ் அகாடமி (வண்டலூர்) ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒன்றிய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து துறையில் டிஐஜியாக இருந்த ரம்யா பாரதி, பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய தொழில் பாதுகாப்பு படை டிஐஜியாக இருந்த பொன்னி, பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வட சென்னை போக்குவரத்து இணை கமிஷனராக இருந்த சோனல் சந்திரா, குற்ற ஆவணக்காப்பக ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒன்றிய அரசு உளவுத்துறையில் டிஐஜியாக இருந்த ஜார்ஜி ஜார்ஜ், பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிபிஐ (குஜராத்) எஸ்பியாக இருந்த கலைச்செல்வன், பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை குடியுரிமைப் பிரிவு எஸ்பியாக இருந்த அருண் சக்திக்குமார், பதவி உயர்வு பெற்று டிஐஜியாக அதே பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம் குடியுரிமைப் பிரிவு எஸ்பியாக இருந்த அரவிந்த் மேனன், பதவி உயர்வு பெற்று டிஐஜியாக அதே பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளார்.
உளவுத்துறை எஸ்பியாக இருந்த செஷாங் சாய், பதவி உயர்வு பெற்று காஞ்சிபுரம் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உயர்நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்பு பிரிவு எஸ்பியாக இருந்த தேஸ்முக் சேகர் சஞ்சய், பதவி உயர்வு பெற்று ராமநாதபுரம் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒன்றிய அரசுப் பணியில் உள்ள தீபா கனிங்கர், பதவி உயர்வு பெற்று அதே பணியில் டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் அயல்பணியில் உள்ள ஓம் பிரகாஷ் மீனா, பதவி உயர்வு பெற்று அதே பணியில் டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆவடி பட்டாலியன் எஸ்பியாக இருந்த மணிவண்ணன், பதவி உயர்வு பெற்று நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தீவிரவாத தடுப்புப் பிரிவு எஸ்பியாக இருந்த அருளரசு, பதவி உயர்வு பெற்று விழுப்புரம் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆவடி தலைமையிட துணை கமிஷனராக இருந்த மகேஸ்வரன், சென்னை தலைமையிட இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் எஸ்பியாக இருந்த சரவணன், திருநெல்வேலி சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பியாக இருந்த சாமிநாதன், திண்டுக்கல் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மனித உரிமை ஆணைய எஸ்பியாக இருந்த ஜெயலட்சுமி, தாம்பரம் இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிலை தடுப்புப் பிரிவு எஸ்பியாக இருந்த சிவக்குமார், ஆவடி இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் டிஐஜியாக இருந்த மூர்த்தி, சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் டிஐஜியாக இருந்த தேவராணி, சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை கமிஷனராக இருந்த சந்தோஷ் ஹதிமணி, சேலம் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமலாக்கப்பிரிவு ஐஜியாக இருந்த கபில்குமார் சரத்கர், சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனராக இருந்த கண்ணன், கோவை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
போலீஸ் அகாடமி ஐஜியாக இருந்த தேன்மொழி, போலீஸ் விரிவாக்கப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய மண்டல ஐஜியாக இருந்த நிர்மல்குமார் ஜோஷி, சென்னை மாநகர தலைமையிட கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நிர்வாகப் பிரிவு ஐஜியாக இருந்த பாலகிருஷ்ணன், மத்திய மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தாம்பரம் கூடுதல் கமிஷனராக இருந்த மகேஸ்வரி, டிஜிபி அலுவலக நிர்வாகப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை நிர்வாகப் பிரிவு கூடுதல் கமிஷனராக இருந்த விஜயேந்திர பிதாரி, தென் மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
போலீஸ் விரிவாக்கப் பிரிவு ஐஜியாக இருந்த நரேந்திரன் நாயர், தென் சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை கமிஷனராக இருந்த சரவண சுந்தரம், மேற்கு மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் எஸ்பியாக இருந்த ஆதர்ஸ் பச்சோரி, சென்னை சைபர் கிரைம் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு எஸ்பியாக இருந்த சாய் பிரனீத், விழுப்புரம் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினம் எஸ்பியாக இருந்த செல்வக்குமார், வடக்கு மண்டல மதுவிலக்கு அமலாக்கத்துறை எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தாம்பரம் தலைமையிட துணை கமிஷனராக இருந்த செந்தில்குமார், ஆவடி மத்தியக் குற்றப்பிரிவு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு எஸ்பியாக இருந்த உமையாள், போலீஸ் அகாடமி எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
போலீஸ் அகாடமி எஸ்பியாக இருந்த டாக்டர் டி.செந்தில்குமார், திருச்சி துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக இருந்த பிரசன்னகுமார், திருநெல்வேலி மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி வடக்கு துணை கமிஷனராக இருந்த சிபின், செங்கல்பட்டு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
போலீஸ் நலன் பிரிவு எஸ்பியாக இருந்த பாலகிருஷ்ணன், நாகப்பட்டினம் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மதுவிலக்கு அமலாக்கத்துறை எஸ்பியாக இருந்த சந்திர சேகரன், சிலை தடுப்புப் பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாநகர துணை கமிஷனராக இருந்த அனிதா, பெரம்பலூர் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கீழ்பாக்கம் துணை கமிஷனராக இருந்த ஜெரினா பேகம், காவலர் நலன் பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மத்தியக் குற்றப்பிரிவு துணை கமிஷனராக இருந்த கீதா, கீழ்பாக்கம் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை சிவில் சப்ளை சிஐடி எஸ்பியாக இருந்த பாலாஜி சரவணன், சென்னை உயர்நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்பு பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்காசி எஸ்பியாக இருந்த அரவிந்த், கள்ளக்குறிச்சி எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி எஸ்பியாக இருந்த மாதவன், தென்காசி எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி எஸ்பியாக இருந்த சிலம்பரசன், தூத்துக்குடி எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி ஏஎஸ்பியாக இருந்த மதன், பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி மாநகர துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அருப்புக்கோட்டை ஏஎஸ்பியாக இருந்த மதிவாணன், பதவி உயர்வு பெற்று மதுரை வடக்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பழநி 14-வது பட்டாலியன் எஸ்பியாக இருந்த பாண்டியராஜன், ஆவடி 24-வது பட்டாலியனுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை காவலர் பயிற்சி பள்ளி எஸ்பியாக இருந்த மகேஸ்வரி, தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அடையார் துணை கமிஷனராக இருந்த பொன் கார்த்திக் குமார், பள்ளிக்கரணை துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பள்ளிக்கரணை துணை கமிஷனராக இருந்த கார்த்திகேயன், அடையார் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
| அதிகாரி பெயர் | முந்தைய பதவி | புதிய பதவி / பணியிடம் |
|---|
| டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் | சட்டம் & ஒழுங்கு கூடுதல் டிஜிபி | ஆயுதப்படை டிஜிபி |
| சந்தீப் மிட்டல் | சைபர் கிரைம் கூடுதல் டிஜிபி | சைபர் கிரைம் டிஜிபி |
| பால நாகதேவி | பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி | பொருளாதார குற்றப்பிரிவு டிஜிபி (+ சிவில் சப்ளை சிஐடி) |
| T.S. அன்பு | சிபிசிஐடி ஐஜி | சிபிசிஐடி ஏடிஜிபி |
| பிரேம் ஆனந்த் சின்ஹா | தெற்கு மண்டலம் ஐஜி | ஆவடி மாநகர காவல் ஆணையர் (ஏடிஜிபி) |
| தீபக் எம். தாமோர் | மும்பை சிபிஐ ஐஜி | ஏடிஜிபி (மத்திய அரசு) |
| T. செந்தில்குமார் | மேற்கு மண்டலம் ஐஜி | டிஜிபி அலுவலக தலைமையிட ஏடிஜிபி |
| அனிசா ஹுசைன் | சிலை கடத்தல் தடுப்பு ஐஜி | பெண்கள் & குழந்தைகள் குற்றத் தடுப்பு ஏடிஜிபி |
| நஜ்மல் ஹோடா | காவல்துறை நவீனமயமாக்கல் ஐஜி | கமாண்டோ படை ஏடிஜிபி |
| மகேந்திர குமார் ரத்தோடு | தலைமையிட ஐஜி | காவலர் நலன் பிரிவு ஏடிஜிபி |
| K. சங்கர் | ஆவடி மாநகர காவல் ஆணையர் | சிறைத்துறை ஏடிஜிபி |
| டாக்டர் A. அமல்ராஜ் | அமலாக்கப்பிரிவு சிஐடி ஏடிஜிபி | தாம்பரம் மாநகர காவல் ஆணையர் |
| டாக்டர் மகேஷ்வர் தயாள் | சிறைத்துறை ஏடிஜிபி | சட்டம் & ஒழுங்கு கூடுதல் டிஜிபி |
| அபின்தினேஷ் மோடக் | தாம்பரம் மாநகர காவல் ஆணையர் | அமலாக்கப்பிரிவு சிஐடி ஏடிஜிபி |
| டாக்டர் R. தினகரன் | செயல்பாட்டுப் பிரிவு ஏடிஜிபி | TN போலீஸ் அகாடமி ஏடிஜிபி |
| ரம்யா பாரதி | சிவில் விமானப் போக்குவரத்து டிஐஜி | ஐஜி |
| பொன்னி | மத்திய தொழில் பாதுகாப்பு படை டிஐஜி | ஐஜி |
| சோனல் சந்திரா | வட சென்னை போக்குவரத்து இணை கமிஷனர் | குற்ற ஆவணக்காப்பக ஐஜி |
| ஜார்ஜி ஜார்ஜ் | ஒன்றிய உளவுத்துறை டிஐஜி | ஐஜி |
| கலைச்செல்வன் | சிபிஐ (குஜராத்) எஸ்பி | டிஐஜி |
| அருண் சக்திக்குமார் | சென்னை குடியுரிமைப் பிரிவு எஸ்பி | டிஐஜி |
| அரவிந்த் மேனன் | திருவனந்தபுரம் குடியுரிமைப் பிரிவு எஸ்பி | டிஐஜி |
| செஷாங் சாய் | உளவுத்துறை எஸ்பி | காஞ்சிபுரம் சரக டிஐஜி |
| தேஸ்முக் சேகர் சஞ்சய் | உயர்நீதிமன்ற கண்காணிப்பு எஸ்பி | ராமநாதபுரம் சரக டிஐஜி |
| தீபா கனிங்கர் | ஒன்றிய அரசு பணி | டிஐஜி |
| ஓம் பிரகாஷ் மீனா | ராஜஸ்தான் அயல்பணி | டிஐஜி |
| மணிவண்ணன் | ஆவடி பட்டாலியன் எஸ்பி | நெல்லை மாநகர காவல் ஆணையர் |
| அருளரசு | தீவிரவாத தடுப்பு எஸ்பி | விழுப்புரம் சரக டிஐஜி |
| மகேஸ்வரன் | ஆவடி தலைமையிட துணை கமிஷனர் | சென்னை தலைமையிட இணை கமிஷனர் |
| சரவணன் | விழுப்புரம் எஸ்பி | திருநெல்வேலி சரக டிஐஜி |
| சாமிநாதன் | லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி | திண்டுக்கல் சரக டிஐஜி |
| ஜெயலட்சுமி | மனித உரிமை ஆணைய எஸ்பி | தாம்பரம் இணை கமிஷனர் |
| சிவக்குமார் | சிலை தடுப்புப் பிரிவு எஸ்பி | ஆவடி இணை கமிஷனர் |
| ஆதர்ஸ் பச்சோரி | பெரம்பலூர் எஸ்பி | சென்னை சைபர் கிரைம் எஸ்பி |
| சாய் பிரனீத் | செங்கல்பட்டு எஸ்பி | விழுப்புரம் எஸ்பி |
| செல்வக்குமார் | நாகப்பட்டினம் எஸ்பி | வடக்கு மண்டல மதுவிலக்கு எஸ்பி |
| அனிதா | மதுரை துணை கமிஷனர் | பெரம்பலூர் எஸ்பி |
| மதன் | தூத்துக்குடி ஏஎஸ்பி | திருநெல்வேலி மாநகர துணை கமிஷனர் |
| மதிவாணன் | அருப்புக்கோட்டை ஏஎஸ்பி | மதுரை வடக்கு துணை கமிஷனர் |
| பொன் கார்த்திக் குமார் | அடையார் துணை கமிஷனர் | பள்ளிக்கரணை துணை கமிஷனர் |
| கார்த்திகேயன் | பள்ளிக்கரணை துணை கமிஷனர் | அடையார் துணை கமிஷனர் |
