நேபாளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் தமிழர்கள் உள்ளிட்ட 7 பேர் பலி

Published On:

| By Pandeeswari Gurusamy

Accident

நேபாளத்தில் சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேபாளத்திற்கு ஆன்மீகப் பயணம் மற்றும் சுற்றுலா சென்ற பயணிகள் தங்கியிருந்த பகுதியில் இருந்து புறப்பட்டபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, ரோடு ஓரத்தில் இருந்த ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது.

ADVERTISEMENT

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நேபாள நாட்டு மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் மக்கள், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொள்ளச்சி தேவ கோட்டையை சேர்ந்த முத்துக்குமார், மீனாட்சி, சிவகாமி, மீனா, விஜயாள் ஆகியோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share