பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் நேற்று நடந்த பயங்கர நில நடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிலிப்பைன்ஸில் செபு மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 30) இரவு 7.29 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. போகோ நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகளில் வீடுகள், வணிக வளாக கட்டிடங்கள் குலுங்கியது. நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் சீட்டு கட்டு போல சரிய தொடங்கியது. இந்த இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ச்சியாக மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக நிலடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் சிறிது நேரத்தில் திரும்பப்பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.