திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு நன்னீராட்டு விழாவை முன்னிட்டு ஜூலை 4-ந் தேதி முதல் ஜூலை 8-ந் தேதி வரை 600க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. Tiruchendur Special Buses
திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி ஜூலை 4-ந் தேதி வெள்ளிக்கிழமை முதல் சென்னை, திருச்சி, சேலம், தஞ்சாவூர், கோவை, நாகர்கோவில், கன்னியாகுமரி, மதுரை உட்பட மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு பேருந்துகள் ஜூலை 4-ந் தேதி வெள்ளிக்கிழமை முதல் ஜூலை 8-ந் தேதி வரை இயக்கப்படும்.

மேலும் திருச்செந்தூரில் 3 தற்காலிக பேருந்து நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து தலா 10 சிறப்பு பேருந்துகள் வீதம் 30 சிறப்பு பேருந்துகள், முருகன் கோவில் வாசல் வரை இயக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மருத்துவர் இரா.சுகுமார் அறிவித்துள்ளார்..