தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் (ராஜ்யசபா எம்.பி) இடங்களுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 2-வது வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த மாத இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் ஏப்ரல் 2-ந் தேதியுடன் முடிவடைகிறது. திமுகவின் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி என்விஎன் சோமு, அதிமுக தம்பிதுரை, தமாகா ஜிகே வாசன் ஆகியோரது பதவி முடிவடைகிறது.
இதனையடுத்து 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடத்தப்படும். தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் களைகட்டும் நிலையில் மாநிலங்களவை தேர்தலும் நடைபெற இருக்கிறது. சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகளிலும் ராஜ்யசபா சீட்டை உறுதி செய்வதில் கட்சிகள் கவனம் செலுத்துவதும் குறிப்பிடத்தக்கது.
