ஜெய்பூரில் செயல்பட்டு வந்த அரசு மருத்துவமனயில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்மான் சிங் அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் தீவிர சிகிச்சை பிரிவு பகுதியில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால் அப்பகுதியில் இருந்த நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கி 2 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் என 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.
இந்நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் பஜன்லால் சர்மா உத்தரவிட்டுள்ளார். முதல் கட்டமாக ஷாட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.