தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடி SIR படிவங்கள் விநியோகம்

Published On:

| By Mathi

SIR Tamil Nadu

தேர்தல் ஆணையம் நடத்தி வரும் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில், தமிழ்நாட்டில் இதுவரை 6,00,54,300 படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது 93.67 சதவீதம் ஆகும்.

தமிழ்நாட்டில் மொத்தம் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 6,41,14,583 கணக்கெடுப்பு படிவங்கள் அச்சிடப்பட்டு இன்று (16.11.2025) மாலை 3 மணி வரை 6,00,54,300 படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 68,467 வாக்குச் சாவடி நிலை அலுவலர்களும் 2,37,390 வாக்குச்சாவடி முகவர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் அதிக எண்ணிக்கையிலான வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்குமாறு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார், சத்தீஷ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப்பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் 2025 நவம்பர் 4 அன்று தொடங்கி டிசம்பர் 4 வரை நடைபெறுகிறது. 2025 அக்டோபர் 27-ம் தேதி நிலவரப்படி, மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 50,99,72,687 ஆக உள்ளது. இதில் 50,97,43,180 கணக்கெடுப்பு படிவங்கள் (99.95%) அச்சிடப்பட்டு அவற்றில் 49,73,39,480 கணக்கெடுப்பு படிவங்கள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்தத் தீவிர திருத்தப் பணிகளில் 5,33,093 வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள், 10,41,291 வாக்குச் சாவடி முகவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாநிலங்கள் வாரியாக

ADVERTISEMENT
  • அந்தமான் & நிக்கோபார்
    • வாக்காளர்கள்: 3,10,404
    • அச்சிடப்பட்டது: 100%
    • விநியோகம்: 99.94%
  • சத்தீஸ்கர்
    • வாக்காளர்கள்: 2,12,30,737
    • அச்சிடப்பட்டது: 100%
    • விநியோகம்: 96.60%
  • கோவா
    • வாக்காளர்கள்: 11,85,034
    • அச்சிடப்பட்டது: 100%
    • விநியோகம்: 100%
  • குஜராத்
    • வாக்காளர்கள்: 5,08,43,436
    • அச்சிடப்பட்டது: 100%
    • விநியோகம்: 99.16%
  • கேரளா
    • வாக்காளர்கள்: 2,78,50,855
    • அச்சிடப்பட்டது: 100%
    • விநியோகம்: 93.72%
  • லக்ஷத்வீப்
    • வாக்காளர்கள்: 57,813
    • அச்சிடப்பட்டது: 100%
    • விநியோகம்: 100%
  • மத்தியப் பிரதேசம்
    • வாக்காளர்கள்: 5,74,06,143
    • அச்சிடப்பட்டது: 100%
    • விநியோகம்: 99.45%
  • புதுச்சேரி
    • வாக்காளர்கள்: 10,21,578
    • அச்சிடப்பட்டது: 100%
    • விநியோகம்: 94.10%
  • ராஜஸ்தான்
    • வாக்காளர்கள்: 5,48,84,479
    • அச்சிடப்பட்டது: 99.58%
    • விநியோகம்: 98.15%
  • தமிழ்நாடு
    • வாக்காளர்கள்: 6,41,14,587
    • அச்சிடப்பட்டது: 100%
    • விநியோகம்: 93.67%
  • உத்தரப் பிரதேசம்
    • வாக்காளர்கள்: 15,44,30,092
    • அச்சிடப்பட்டது: 100%
    • விநியோகம்: 97.64%
  • மேற்கு வங்காளம்
    • வாக்காளர்கள்: 7,66,37,529
    • அச்சிடப்பட்டது: 100%
    • விநியோகம்: 99.16%


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share