ADVERTISEMENT

500+ காலியிடங்கள்… பேங்க் ஆப் இந்தியாவில் ‘ஆபீசர்’ வேலை: எம்பிஏ, டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்!

Published On:

| By Santhosh Raj Saravanan

500 job vacancies in Bank of India

“2026 பிறக்கப் போகுது… புது வருஷத்துலயாச்சும் ஒரு பேங்க் வேலையில உட்கார்ந்திடணும்” என்று லட்சியத்தோடு படித்துக் கொண்டிருக்கும் இளைஞரா நீங்கள்? உங்களுக்கான அந்த ‘குட் நியூஸ்’ இதோ வந்தாச்சு.

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியா (Bank of India), நாடு முழுவதும் காலியாக உள்ள அதிகாரிகள் பணியிடங்களை நிரப்பப் பிரம்மாண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

மொத்தம் 514 காலியிடங்கள்…

அதுவும் உயர் அதிகாரி அந்தஸ்து கொண்ட வேலை என்பதால், போட்டித் தேர்வுக்குப் படிப்பவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ADVERTISEMENT

என்னென்ன வேலைகள்?

வழக்கமான கிளார்க் வேலை இல்லை இது. நேரடியாக அதிகாரி (Scale-I to Scale-IV) பதவி!

ADVERTISEMENT
  • கிரெடிட் ஆபீசர் (Credit Officer): அதிகபட்சமாக 262 இடங்கள் இதில்தான் உள்ளன.
  • சீஃப் மேனேஜர் (Chief Manager): பொருளாதாரம் மற்றும் ஐடி பிரிவு.
  • சட்ட அதிகாரி (Law Officer) & எகனாமிஸ்ட்: சிறப்புப் பிரிவுகள்.
  • டெக்னிக்கல் அனலிஸ்ட்: தொழில்நுட்பம் சார்ந்த பணிகள்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

பதவிக்கு ஏற்ப தகுதிகள் மாறும். ஆனால், அதிக இடங்களைக் கொண்ட ‘கிரெடிட் ஆபீசர்’ பணிக்குக் கீழே உள்ள தகுதிகள் அவசியம்:

  • கல்வி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு (Degree) முடித்திருக்க வேண்டும்.
  • கூடுதல் தகுதி: அத்துடன் எம்பிஏ (MBA), பிஜிடிபிஎம் (PGDBM) அல்லது வணிகவியல் சார்ந்த முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். சிஏ (CA) முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 23 வயது பூர்த்தியடைந்தவராகவும், 35 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். (சீஃப் மேனேஜர் போன்ற உயர் பதவிகளுக்கு வயது வரம்பு மாறுபடும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயதுத் தளர்வு உண்டு).

சம்பளம் எவ்வளவு?

மத்திய அரசுக்கு இணையான வங்கிச் சம்பளம்.

  • கிரெடிட் ஆபீசர் (JMG Scale-I): மாதம் ரூ.36,000 அடிப்படை ஊதியத்தில் தொடங்கி, இதர படிகள் அனைத்தும் சேர்த்து ரூ.63,840 வரை சம்பளம் செல்லும். உயர் பதவிகளுக்குச் சம்பளம் லட்சத்தைத் தாண்டும்.

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் (Personal Interview) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வில் ஆங்கிலம், வங்கித் துறை அறிவு மற்றும் பொது அறிவு தொடர்பான கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

விருப்பமுள்ளவர்கள் www.bankofindia.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ‘Career’ பகுதியில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம்:

  • எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்: ரூ.175.
  • மற்ற அனைத்துப் பிரிவினருக்கும்: ரூ.850.

கடைசி தேதி:

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: பிப்ரவரி 2026 முதல் வாரம் வரை அவகாசம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“சும்மா டிகிரி மட்டும் முடிச்சுட்டு வேலை தேடுறதை விட, எம்பிஏ முடிச்ச கையோட இப்படி ஒரு ஆஃபீசர் வேலைக்குப் போறது செம்ம கெத்து!” தகுதியுள்ளவங்க உடனே அப்ளை பண்ணுங்க.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share