ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கணுமா.. தினமும் காலையில்இதை செஞ்சா போதும்..!

Published On:

| By Santhosh Raj Saravanan

5 morning habits for stay healthy and fit life

ஆரோக்கியமான வாழ்வுக்கு தினமும் காலை நாம்கட்டாயம் செய்ய வேண்டிய 5 பழக்கங்கள் குறித்து பார்ப்போம்.

தற்போதைய நாட்களில் காலை தூக்கத்தில் இருந்து விழித்தவுடன் நாம் செல்போனில் ரீல்ஸ் பார்க்கத் தொடங்கிவிடுகிறோம். அதனைத் தொடர்ந்து ஒரு தேநீரைப் பருகிவிட்டு அவசர அவசரமாக அலுவலகத்திற்குச் செல்லத் தயாராகிறோம். அதன்பிறகு அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு அலுவலகமோ அல்லது வேலைக்கோ சென்றுவிடுகிறோம். இதனால் அந்த நாள் முழ்வதும் சோர்வாகவும், டென்ஷனாகவுமே இருக்கும். இதனால் வேலைகளில் சரிவர கவனம் செலுத்த முடியாத சூழல் ஏற்படும்.

ADVERTISEMENT

ஆரோக்கியமாக இருக்க 5 காலை வழக்கங்கள் (5 morning habits to stay healthy) : நாம் காலை எழுந்தவுடன் பின்பற்றும் ஆரோக்கியமான 5 பழக்க வழக்கங்கள் அந்த நாளை புத்துணர்வோடும், கவலையின்றியும் வைத்திருக்க உதவுகிறது. ஏனெனில் ஆரோக்கியமாக ஒருநாளை நாம் தொடங்கும்போது அது நம்மை நோயில் இருந்து பாதுகாக்கிறது. உடல் ஆற்றல், மன சமநிலையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சூரிய ஒளி படும்படி அமருங்கள் (Sit in the morning sunlight) : தினமும் சிறிது சூரிய ஒளியைப் பெறுவது மிகவும் நன்மை அளிக்கிறது. காலையில் சூரிய ஒளி கிடைப்பது உடலில் வைட்டமின் டி உற்பத்தியை அதிகரிக்கிறது. இது எலும்புகளை வலுப்படுத்துகிறது, மனநிலையை மேம்படுத்துகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. காலையில் மிதமான வெயிலில் 10-15 நிமிட நடைப்பயிற்சி அல்லது சூரிய ஒளியில் உட்கார்ந்தால் போதும். இது நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்க உதவுகிறது மற்றும் சோர்வைக் குறைக்க உதவுகிறது.

ADVERTISEMENT

தியானம், சுவாசப்பயிற்சி (Meditation, breathing exercises) : மன சமநிலையைப் பேணுவது சமநிலை முக்கியமானதாக உள்ளது. ஆழ்ந்த சுவாசம், தியானம் அல்லது நேர்மறை சிந்தனை ஆகியவை மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்க உதவிபுரிகிறது. உங்கள் மனதை அமைதிப்படுத்த காலையில் சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருக்கலாம். இது நாள் முழுவதும் கவனம் அதிகரிப்பதையும், மகிழ்ச்சியோடு இருக்கவும் உதவுகிறது.

உடற்பயிற்சி, நடைபயிற்சி (Exercise, walking) :  உடற்பயிற்சி என்பது நமது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும்.  20-30 நிமிடங்கள் லேசான யோக, நடைபயிற்சி அல்லது வேறு ஏதேனும் உடல் இயக்க செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். உடற்பயிற்சி நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதோடு எடையைக் கட்டுப்படுத்துகிறது. இதயத்தை பலப்படுத்துகிறது மற்றும் தூக்கத்தை மேம்படுத்துகிறது.

ADVERTISEMENT

பச்சை காய்கறிகள் சாப்பிட வேண்டும் (Eat green vegetables) : பச்சை காய்கறிகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாகும். கீரை, வெந்தயம், ப்ரோக்கோலி போன்ற பச்சை காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அவை கண்கள், தோல் மற்றும் செரிமானத்திற்கு நன்மை அளிக்கின்றன. பச்சை காய்கறிகளை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது உடலை நச்சு நீக்கி நோயைத் தடுக்க உதவுகிறது.

தண்ணீர் குடிக்க வேண்டும்(Stay hydrated) : காலையில் சீரான அளவு தண்ணீர் குடிப்பது முக்கியம். காலையில் முதலில் 1-2 கிளாஸ் தண்ணீரையும், நாள் முழுவதும் 8-10 கிளாஸ் தண்ணீரையும் குடிக்க வேண்டும். தண்ணீர் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் பளபளப்பான சருமத்தை ஊக்குவிக்கிறது. வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share