சருமத்தை பளபளப்பாக மாற்றும் முக்கியமான 5 பழங்களின் பட்டியலைப் பார்ப்போம்.
உடல் ஆரோக்கியத்திற்கு பழங்கள் மிகுந்த நன்மை அளிக்கின்றன. பழங்களில் அதிகமான இயற்கை ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பழங்களை சாப்பிடுவது நமது சருமத்தை பிரகாசமாக்குவதோடு (Skin Glow), உள் உறுப்புகளை பலப்படுத்தும். வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த பழங்களை உட்கொள்வது உங்கள் சருமத்தின் பளபளப்பை மேம்படுத்தும். சில பழங்கள் சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்தும் உள்ளன.
பழங்களை தொடர்ந்து உட்கொள்வது உங்கள் முகத்திற்கு இயற்கையான பளபளப்பைக் கொண்டுவருவது மட்டுமல்லாமல், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது. சருமத்தை பளபளப்பாக மாற்றும் 5 பழங்கள் குறித்து இங்கு காணலாம்.
பப்பாளி (Papaya benefits): பப்பாளி என்பது சருமத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. இதில் பப்பெய்ன் எனப்படும் நொதி உள்ளது. இது இறந்த சரும செல்களை அகற்றவும், சருமத்தில் அடைபட்ட துளைகளை திறக்கவும் உதவுகிறது. வைட்டமின்கள் ஏ மற்றும் சி நிறைந்த பப்பாளி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கரும்புள்ளிகளை குறைக்கிறது. தினமும் ஒரு கிண்ணம் பப்பாளி சாப்பிடுவது வயிற்றை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
ஆரஞ்சு பழம்(Orange fruit benefits): ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட்டு சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. ஆரஞ்சு சாப்பிடுவது வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்திக்கும் அவசியம். ஆரஞ்சு பழத்தை தொடர்ந்து உட்கொள்வது சருமத்தை இறுக்கமாக்குகிறது மற்றும் முகம் பொலிவாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்க உதவுகிறது.
கிவி பழம் (Kiwi fruit benefits): கிவி பழத்தில் ஆரஞ்சை விட அதிக வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது, இது சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கும். முன்கூட்டியே வயதான தோற்றம் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது. கிவி பழத்தில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகின்றன.
மாதுளைப் பழம்(Pomegranate benefits): மாதுளை ரத்த ஓட்டத்தை அதிகரித்து சரும நிறத்தை மேம்படுத்துகிறது. மாதுளை வயதானதைத் தடுக்க உதவி புரியும் முக்கிய பழமாகும். இது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. சருமம் இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாற வழிவகுக்கிறது. மாதுளையில் இதய ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. மாதுளை விதைகள் சரும செல்களைப் புதுப்பிக்க உதவுகின்றன, இளமையான தோற்றத்திற்கு பங்களிக்கின்றன.
ஆப்பிள் (Apple benefits): ஆப்பிள்கள் சருமத்திற்கு மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஆப்பிள்களில் வைட்டமின்கள் பி மற்றும் சி மற்றும் பொட்டாசியம் உள்ளன, இவை ஆரோக்கியமான சருமத்திற்கு பங்களிக்கின்றன. ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. எடையைக் கட்டுப்பாட்டை உதவுகிறது மற்றும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்கிறது. ஆப்பிள்களை உட்கொள்வது சரும அமைப்பை மேம்படுத்தி, அதற்கு பளபளப்பை அளிக்கிறது.
