முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 4379 போலி வாக்காளர்கள் – நிர்மலா சீதாராமன் சாடல்

Published On:

| By Pandeeswari Gurusamy

4379 fake voters in Stalin's Kolathur constituency

தமிழக முதல்வர் ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் 4379 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கோவை வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,முதலிபாளையம் பகுதியில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு முழுவதும் SIR க்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக போராட்டம் நடத்துவது ஆச்சரியம் அளிக்கிறது. எனவும், சுமார் 60 ஆண்டுகளாக உள்ள கட்சி, SIR ஐ பாஜக எடுத்து வந்தது போல் பேசுகின்றனர். கடந்த 1952-1956, 57, 61, 65, 66, 83-84, 87-89, 92, 93, 95, 2002, 2003, 2004 ஆகிய 13 முறை SIR நடைபெற்றுள்ளது. அப்போதெல்லாம் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக, இப்போது போராட்டம் நடத்துவது எதற்கு? SIR குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் மக்களின் வாக்குரிமையை பறிக்கும் செயல்தான் SIR . இது சூழ்ச்சி என்கிறார். என்ன சொல்கிறோம் என புரியாமல் பேசுகிறார் என தெரிவித்தார்.

ADVERTISEMENT

எதற்கு இந்த போராட்டம்? திமுக இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த போது இதை ஏன் அதை எதிர்க்கவில்லை. தங்களின் ஆட்சியின் தோல்விகளை மறைக்க திமுக இது போன்ற நிலைப்பாட்டை எடுத்துவருகிறது. எதிர்க்கட்சிகளோ பாஜகவோ வெற்றி பெற்றால் இவிஎம் இயந்திரங்கள் மீது குற்றம்சாட்டுகின்றனர். ஒரு இடத்தில் கூட வருமான வரித்துறை நடவடிக்கை தவறாக இல்லை. நாட்டில் 13 முறை நடந்த SIR எதிர்க்கவில்லை. தேர்தல் நடப்பது பீகாரில் ஆனால் ராகுல் காந்தி அரியானாவில் வோட் சோரி என்கிறார். துணை முதலமைச்சருக்கு SIR என்றால் என்ன என்றே தெரியவில்லை.

முதல்வர் ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் 4379 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். ஒரே பேரில் 3 வாக்காளர் அட்டைகள் வைத்துள்ளார். இதையெல்லாம் வைத்துதான் நீங்கள் வெற்றி பெற்றீர்களா? 30 வாக்காளர் அட்டைகள் ஒரே முகவரியில் 84 வது பூத் 11வது முகவரியில் இருந்துள்ளது. 62 வாக்காளர்கள் 20வது எண் முகவரியில் 27வது பூத் நம்பரிலும், 80 வாக்காளர்கள் பல்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் 10, பூத் 140 லும் உள்ளனர். இதை சரிபார்த்த போது 5,964 வாக்காளர்கள் போலியாக இருந்துள்ளனர். இது போன்ற முறைகேடுகளை நீக்க வேண்டாமா?

ADVERTISEMENT

சி.எஸ்.டி.எஸ் என்ற அமைப்பு தங்களின் ஆய்வு சரியில்லை எனக்கூறிவிட்ட பிறகும் அதை ராகுல் காந்தி மகாராஷ்டிராவில் பேசிக்கொண்டிருக்கிறார். 7 லட்சம் பேரின் வாக்கு 2 இடங்களில் உள்ளது. 20 லட்சம் வாக்காளர்கள் போலி, 35 லட்சம் பேர் வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர் 68 லட்சம் பேர் நீக்கப்படுவது சரியா இல்லையா? தேர்தல் ஆணையத்திற்கு ஆர்டிகள் 324 முதல் 329 வெளிப்படையாக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி கட்சிகள் இந்திய அரசியலமைப்பு அமைப்புகளின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை பலம் இழக்க வைக்காதீர்கள். தேர்தல் ஆணையம் ஏன் நடத்தவில்லை என்ற முந்தைய தேர்தல்களின் போது ஏன் திமுக கேட்கவில்லை.

ADVERTISEMENT

ஓட்டுரிமை யாருக்கும் போகாது – அனைத்து ஆவணங்களுக்கும் மாற்று ஆவணங்களுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வீட்டிற்கே பி.எல்.ஓ வருவார். கிராம மக்கள் அலைய வேண்டியதில்லை என்றார்.

டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து பேசுகையில் செங்கோட்டை முன்பே சம்பவம் நடந்துள்ளது. உள்துறை அமைச்சரும் அங்கு சென்றுள்ளார். சம்பவம் குறித்து முழுமையான அறிக்கை கிடைத்த பின்பு அதன் தகவல்கள் தெரியவரும் என கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share