சென்னை எழும்பூர் ரயில் நிலைய பராமரிப்பு பணிகளால் தாம்பரத்தில் இருந்து சில ரயில்கள் இயக்கப்பட்டன. இதில் 4 ரயில்கள் இன்று ஆகஸ்ட் 5-ந் தேதி முதல் மீண்டும் சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படுகின்றன.

சென்னை எழும்பூர்- மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 22671)
மதுரை- சென்னை எழும்பூர் தேஜஸ் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 22672)
சென்னை எழும்பூர்- புதுச்சேரி மெமு பாசஞ்சர் (வண்டி எண் 66051)
புதுச்சேரி- சென்னை எழும்பூர் மெமு பாசஞ்சர் (வண்டி எண் 66052) ஆகியவை இன்று முதல் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மீண்டும் இயக்கப்படுகின்றன என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.