அடத்தியான கூந்தல் வளர என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பின்வருமாறு பார்ப்போம்.
இந்த ஆண்டின் கடைசி மாதத்திற்கு வந்துவிட்டோம். ஆண்டு தொடக்கத்திலிருந்து நீங்கள் நினைத்துக் கொண்டிருந்த உங்கள் தலைமுடி பராமரிப்பை இப்போதாவது தொடங்கலாமா?.. ஆண், பெண்கள் என இருவருக்கும் அழகான அடர்த்தியான நீளமான கூந்தல் வேண்டும் என்பதே பெரும் விருப்பமாக உள்ளது. ஆனால் அதற்கென எந்த பராமரிப்பும் செய்யாமல் இருந்தால் கூந்தல் வளர்வது கடினம்தான். அதே சமயம் விலை உயர்ந்த சலூன்கள் சென்று தான் முடியை அழகாக பராமரிக்க முடியும் என்பது அவசியமில்லை. எளிய முறையில் வீட்டிலேயே நாம் கூந்தலை பராமரிக்கலாம்.
குளிர்காலத்தில் முடி வறட்சியாகவும் வலுவிழந்தும் காணப்படும். சிறுவயதில் இருந்து பெரியவர்கள் வீட்டில் தலையில் எண்ணெய் தேய்க்க சொல்வார்கள். ஆனால் நாம் சரியாக எண்ணெய் தலையில் தேய்க்க மாட்டோம். அதுவே முதல் தலைமுடி பிரச்சனைக்கு வழிவகுக்கும். தேங்காய் எண்ணெய், ஆமணக்கு எண்ணெயை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சூடாக்கி தலையில் தேய்த்து வர தலைமுடி வேகமாக வளரும்.குறைந்தது ஒரு மணி நேரம் அல்லது அது உங்களுக்குப் பொருத்தமாக இருந்தால் இரவு முழுவதும் அதை அப்படியே வைத்திருங்கள். பிறகு காலையில் லேசான ஷாம்பு கொண்டு தலைக்கு குளிக்கலாம்.
உங்கள் தலைமுடிக்கு தினமும் எண்ணெய் தடவ வேண்டாம். அது துளைகளை அடைத்து, தூசியை ஈர்க்கிறது, மேலும் உங்கள் தலைமுடியை அதிகமாகக் கழுவ வைக்கிறது. வாரத்திற்கு இரண்டு முறை அல்லது உங்களுக்கு தகுந்தாற்போல் பயன்படுத்தலாம். கூந்தலை பராமரிக்க எளிய முறையில் வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த
டிப்ஸை பார்க்கலாம்
உச்சந்தலை பராமரிப்பு
பெரும்பாலும் பலர் தங்கள் சருமத்தை கவனித்துக்கொள்கிறார்கள், ஆனால் உச்சந்தலைக்கும் அதே தேவைகள் இருப்பதை மறந்துவிடுகிறார்கள். உங்கள் உச்சந்தலை ஆரோக்கியமற்றதாகவோ, வீக்கமாகவோ அல்லது வறண்டதாகவோ இருந்தால் உங்கள் முடி வளர்ச்சி இயற்கையாகவே மெதுவாகிவிடும்.10 நாட்களுக்கு ஒரு முறை மென்மையான முறையில் உச்சந்தலை ஸ்க்ரப் செய்யலாம். இதற்கு கற்றாழை பயன்படுத்துவது நல்லது.
மாசுபட்ட பெருநகரத்தில் வசிக்கிறீர்கள் என்றால், வாரத்தின் ஒரு நாள் அரிசி வடித்த கஞ்சி தண்ணீர் அல்லது கிரீன் டீ தண்ணீரில் உங்கள் உச்சந்தலையை நன்றாக அலசவும். சிலிகான் இல்லாத கண்டிஷனரை உச்சந் தலையில் ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம். கண்டிஷனரை முடிகளில் மட்டுமே பயன்படுத்தவும். கழுவும் போது உங்கள் உச்சந்தலையை நகங்களால் சொறிவதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் தலைமுடி எவ்வளவு சுத்தமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு முடி வளர்ச்சியும் அதிகரிக்கும்.
தலைமுடிக்கு ஏற்ற உணவுகள்
முடி வளர்ப்பது என்பது அழகுக்கான வழக்கம் மட்டுமல்ல, இது ஊட்டச்சத்து நிறைந்த ஒன்றாகும். உணவில் ஊட்டச்சத்துகள் குறைவாக இருந்தால், எந்த சீரம் அல்லது ஷாம்புவும் தலைமுடி பிரச்னையை சரிசெய்ய முடியாது.
துவரம் பருப்பு, காராமணி, கொண்டை கடலை, முட்டை, பனீர், தயிர், கீரை, பீட்ரூட், வெந்தயம் மற்றும் பிற இரும்புச்சத்து நிறைந்த காய்கறிகள் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கைப்பிடி பாதாம், வால்நட்ஸ், பூசணி விதைகள் தினமும் ஒரு வாழைப்பழம், ஆப்பிள், இளநீர் போன்றவற்றை எடுத்துக் கொள்வது முடி வளர்ச்சிக்கு மட்டுமல்ல உங்கள் மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் அவசியம்.
தலைமுடியின் முனைகளை வெட்டி சரி செய்தல்
நமக்கு தலைமுடி வளரவில்லை என நமக்கு உணர வைப்பதில் முக்கியமான ஒன்று முனைகளில் உள்ள முடி வெடித்தல் மற்றும் வறட்சியாக காணப்படுதல். குளிர்காலத்தில் நம் தலை முடியை சூடாக நீரில் கழுவுவது மற்றும் முடியை சரியாக காய வைக்காமல் கட்டுவது போன்றவற்றால் இது வரலாம். முடி பராமரிப்பிற்கு முன் ஒரு முறையாவது ஒரு சிறிய மைக்ரோ-ட்ரிம் செய்யுங்கள்.
அகலமான பல் கொண்ட சீப்பைப் பயன்படுத்தி முனைகளிலிருந்து மேல்நோக்கி சிக்கலை அகற்றுங்கள். முடி ஈரமாக இருக்கும்போது கட்டுவதைத் தவிர்க்கவும். மிகவும் இறுக்கமான ரப்பர் பேண்டுகளைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். 2025 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் உங்கள் தலைமுடியை நீளமாகவும் வலுவாகவும் வளர்ப்பதற்கு மந்திரமோ, விலையுயர்ந்த சிகிச்சைகளோ அல்லது சிக்கலான நடைமுறைகளோ தேவையில்லை.
தலைமுடிக்கு சீரான நேரம் ஒதுக்குங்கள்
முடி வளர்ச்சி மெதுவாக உள்ளது, வாரத்திற்கு மில்லி மீட்டர்கள் மட்டுமே முடி வளரும். பின்வரும் பழக்கங்களை நீங்கள் 15-20 நாட்களுக்குப் பின்பற்றினால் முடி உதிர்வு குறைந்துள்ளதையும், முடி மென்மையாக இருப்பதையும் பார்ப்பீர்கள். திங்கட்கிழமையில் முடியை மென்மையான கழுவி பிறகு கண்டிஷனர் பயன்படுத்துங்கள். புதன்கிழமை வடித்த கஞ்சி அல்லது க்ரீன் டீ மூலம் தலைமுடியை அலச வேண்டும். வெள்ளிக்கிழமையில் வெதுவெதுப்பான எண்ணெய் மசாஜ் அல்லது இரவு முழுவதும் எண்ணெய் தடவிவிட்டு காலை தலையை அலசலாம். சனிக்கிழமை: ஷாம்பு + ஹேர்பேக் (தயிர், கற்றாழை, தேன் சிறந்தது) பயன்படுத்தினால் முடி செழித்து வளரும்.
உங்கள் தலைமுடிக்கு கவனம் செலுத்துங்கள், சரியாக சாப்பிடுங்கள்.நினைவில் கொள்ளுங்கள் முடி மெதுவாக வளரும், ஆனால் அது வளரும். முடி கொட்டுவதை நினைத்து எந்த மன உளைச்சலும் ஆகாதீர்கள். ஆரோக்கியமான வாழ்க்கை முறையே அனைத்தையும் மாற்றும் என்று நம்புங்கள்.
