3-வது நாளாக பரிதவிப்பு.. சென்னை- வளைகுடா நாடுகள் இடையேயான 36 விமான சேவைகள் ரத்து!

Published On:

| By Mathi

Chennai Airport

மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கான 18 விமானங்கள் இன்று மார்ச் 2-ந் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளன. வளைகுடா நாடுகளில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 18 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஈரான் உள்ளிட்ட சில முக்கிய வளைகுடா நாடுகளின் வான்வெளிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டன. இதன் காரணமாக, இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

ADVERTISEMENT

பிப்ரவரி 28 அன்று, மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுமார் 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன;மார்ச் 1 அன்று காலை வரை, 100 விமானங்கள் (50 வருவது, 50 புறப்படுவது) ரத்து செய்யப்பட்டன.
இந்திய நிறுவனங்கள் மொத்தம் 444 சர்வதேச விமானங்களை ரத்து செய்துள்ளன. இதனால் சென்னை உட்பட நாடு முழுவதும் சர்வதேச விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share