கரூரில் நடிகர் விஜய் கலந்து கொண்ட தவெக பரப்புரையில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தலைமறைவாக உள்ள தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை பிடிக்க காவல்துறையினர் 3 தனிப்படை அமைத்துள்ளனர்.
கரூரில் நடிகர் விஜய் பரப்புரையில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் குறித்து கரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்ற எண் 855/2025 பிரிவு 105,110,125 (b)r, 223 r/w 3 of,TNPPDL Act கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் A1 மாவட்டச் செயலாளர் மதியழகன், A2 பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்,எA3 நிர்மல் குமார் மற்றும் பலர் என வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் தெற்கு நகர பொருளாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் நடிகர் விஜய் நேற்று கரூர் சம்பவம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தலைமறைவாக உள்ள புஸ்ஸி ஆனந்தை தனிப்படை காவலர்கள் வலை வீசி தேடி வருகின்றனர்.