நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் பட்டினப்பாக்கம் அலுவலகத்துக்குள் 3 காவலர்கள் சென்றுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் கரூரில் மேற்கொண்ட பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். கூட்ட நெரிசல் கோர சம்பவத்தை தொடர்ந்து சனிக்கிழமை இரவு நடிகர் விஜய் சென்னை திரும்பினார். சென்னை சென்றவர் கடந்த 2 நாட்களாக பனையூர் இல்லத்தில் தங்கி இருந்தார். இதற்கிடையில் நேற்று இரவு விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை விஜய் பனையூர் இல்லத்தில் இருந்து பட்டினப்பாக்கம் அலுவலகத்துக்கு சென்றார். விஜய் பட்டினப்பாக்கம் அலுவலகத்துக்கு சென்ற சிறிது நேரத்திலேயே 3 காவலர்களும் அந்த அலுவலகத்துக்குள் சென்றுள்ளனர்.
ஏற்கனவே விஜய்யின் தவெக கட்சியின் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விஜய் அலுவலகத்துக்குள் காவல்துறையினர் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .