கோவை மாவட்டம் ஆனைக்கட்டி வனத்துறை சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் லஞ்சம் பெற்ற மூன்று வன காவலர்கள் பிடிப்பட்டனர்.
மாங்கரை மற்றும் ஆனைகட்டி வன சோதனை சாவடி வனகாவலர்கள் பிடிப்பட்டனர்.
முன்னதாக கடந்த 27ம் தேதி கோழி எருவுகள் ஏற்றி சென்ற லாரி ஓட்டுநரிடம் ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளனர்.இது குறித்து லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் லஞ்ச ஒழிப்பு துறை போலிசில் புகார் அளித்துள்ளனர்.
இன்றும் கோழி எருவுகளை எடுத்து செல்ல உள்ளதாக லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் லஞ்ச ஒழிப்பு போலீசில் தெரிவித்துள்ளனர். இதைத்தொர்ந்து ரசாயனம் தடவிய நோட்டுகளை அவர்களிடம் அதிகாரிகள் கொடுத்து அனுப்பினர்.
அப்போது இரண்டு சோதனை சாவடிகளிலும் லஞ்சம் வாங்கிய போது வனகாவலர்கள் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர்
மாங்கரை சோதனை சாவடியில் செல்வகுமார், ஆனைகட்டி சோதனை சாவடியில் சதீஷ்குமார் ஆகிய இருவர் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர்.
அதே போன்று லஞ்ச ஒழிப்புத்து போலீசார் கடந்த 27ம் தேதி லஞ்சம் வாங்கிய சுப்பிரமணி என்பவரையும் பிடித்துள்ளனர். மூவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.