ADVERTISEMENT

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக 294 பேருக்கு பதவி உயர்வு!

Published On:

| By Mathi

Govt School Teachers

தமிழகத்தில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் இருந்து 294 பேர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளதாக பள்ளி கல்வித் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். Government HSC Headmasters

இது தொடர்பாக பள்ளி கல்வித் துறை இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், 2025-2026 ஆம் கல்வி ஆண்டில் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வுகளில் 02.07.2025 நாளிட்ட மாவட்டங்களிடையேயான பொது மாறுதல் கலந்தாய்வில் 153 மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் 42 உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் அவர்களுக்கு விருப்பமான மாவட்டங்களுக்கு மாறுதல் பெற்றனர்.

ADVERTISEMENT

03.07.2025 அன்று நடைபெற்ற உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் இருந்து 294 பேர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு ஆணை பெற்றுள்ளனர்.

மேலும் தொடக்க கல்வி இயக்குநரின் ஆளுகையின் கீழ் உள்ள அரசு/ நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு 03.07.2025 அன்று நடைபெற்றது. இதில் ஒன்றியத்துக்குள் 504 ஆசிரியர்களும் கல்வி மாவட்டத்துக்குள் 65 ஆசிரியர்களும் பணிநிரவல் கலந்தாய்வில் ஆணை பெற்றுள்ளனர்.

ADVERTISEMENT

04.07.2025 அன்று நடைபெற உள்ள முதுகலை ஆசிரியர்களுக்கான மாவட்டத்துக்குள்ளான பொது மாறுதல் கலந்தாய்வில் 10,657 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் மாறுதல் கலந்தாய்வை அமைதியான முறையில் நடைபெற ஏதுவாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் அதற்கான அனைத்துவித முன்னேற்பாடுகளையும் செய்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share