திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28+1 ஒதுக்கீடு- ஒப்பந்தம் கையெழுத்தானது!

Published On:

| By Mathi

DMK Congress seats final

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மார்ச் 4-ந் தேதி நடைபெற்ற இரு கட்சிகளின் குழுக்களிடையே பேச்சுவார்த்தையில் இந்த முடிவு ஏற்கப்பட்டது.

ADVERTISEMENT

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி, ஆட்சியில் பங்கு- அதிக இடங்கள் என்ற முழக்கத்தை முன்வைத்தது. திமுக கூட்டணியில் 41 தொகுதிகளை முதலில் கேட்டது காங்கிரஸ். திமுக இதனை ஏற்கவில்லை.

இதன் பின்னர் டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து பேசிய கனிமொழி, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை திமுக ஏற்க முடியாது என தெரிவித்தார். இதனை ராகுல் காந்தியும் ஏற்றுக் கொண்டார்.

ADVERTISEMENT

இதனையடுத்து 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 1 சட்டப்பேரவை தொகுதி என 39 தொகுதிகளை கேட்டது காங்கிரஸ். திமுக கூட்டணியில் தேமுதிக, மநீம போன்ற புதிய கட்சிகள் இடம் பெற்றுள்ளதால் காங்கிரஸ் கோரிக்கையை திமுகவால் ஏற்க முடியவில்லை.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த மாதம் 28-ந் தேதி காங்கிரஸ் குழு, திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் காங்கிரஸுக்கு கடந்த 2021 தேர்தலில் போட்டியிட்ட எண்ணிக்கையான 25 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்தது.

ADVERTISEMENT

திமுகவின் 25 தொகுதிகள் ஒதுக்கீட்டை ஏற்க முடியாது என காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரும் பேச்சுவார்த்தை குழுவின் தலைவருமான கிரிஷ் சோடங்கர் வெளிப்படையாக தெரிவித்தார்.

இதனையடுத்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா? விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்குமா? என்ற குழப்பம் ஏற்பட்டது.

இந்நிலையில் சோனியா காந்தியின் அறிவுறுத்தலின் பேரில் முதல்வர் ஸ்டாலினை மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் சந்தித்து பேசினார். சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் முகாம் அலுவலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. அச்சந்திப்பில், அதிக இடங்களும் 2 ராஜ்யசபா சீட்டும் கேட்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சிக்கு இந்த ராஜ்யசபா தேர்தலில் 2 சீட்டுகளை கொடுக்க முடியாது; தற்போதைய தேர்தலில் ஒரு சீட்; 2028-ல் இன்னொரு சீட் என தர முடியும் என கூறியிருந்தார்.

இதன் பின்னர் சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மகள் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் ஸ்டாலின், ப.சிதம்பரம், கனிமொழி மூவரும் ஆலோசனை நடத்தினர். அப்போது காங்கிரஸ் தரப்பில் 30 இடங்கள் கேட்கப்பட்டன.

இதனையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று டிஆர் பாலு தலைமையிலான திமுக பேச்சுவார்த்தை குழுவுடன் காங்கிரஸின் கிரிஷ் சோடங்கர், நிவேதித் ஆல்வா, ராஜேஷ்குமார், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டப்பேரவை தொகுதிகளும் 1 ராஜ்யசபா இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் குழுவும் ஏற்றுக் கொண்டுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மார்ச் 4-ந் தேதி நடைபெற்ற இரு கட்சிகளின் குழுக்களிடையே பேச்சுவார்த்தையில் இந்த முடிவு ஏற்கப்பட்டது.

இதனையடுத்து இன்று காலை முதல் திமுக- காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடைபெறும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் மாலை வரை காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழு சென்னைக்கு வரவில்லை.

காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழுவின் கிரிஷ் சோடங்கர், நிவேதித் ஆல்வா, ராஜேஷ்குமார் ஆகியோர் இன்று மாலை சென்னை வந்தனர். இதனையடுத்து அங்கிருந்து அனைவரையும் ஜிஆர்டி கிராண்ட் ஹோட்டலுக்கு செல்வப்பெருந்தகை அழைத்துச் சென்றார்.

அதே நேரத்தில் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக பேச்சுவார்த்தை குழுவுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பின்னர் அண்ணா அறிவாலயத்துக்கு ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார்.

சென்னை ஜிஆர்டி கிராண்ட் ஹோட்டலில் இருந்து காங்கிரஸ் குழுவும் அறிவாலயத்துக்கு வந்தது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் டிஆர் பாலு தலைமையிலான திமுக பேச்சுவார்த்தை குழுவுடன் காங்கிரஸின் கிரிஷ் சொடங்கர், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் அடங்கிய குழு பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டப்பேரவை தொகுதிகளும் 1 ராஜ்யசபா இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் குழுவும் ஏற்றுக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் நீடித்து வந்த இழுபறி சுமூகமாக முடிவுக்கு வந்துள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 29 தொகுதிகள் ஒதுக்கீடு!

இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டப்பேரவை தொகுதிகளும் 1 ராஜ்யசபா இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் குழுவும் ஏற்றுக் கொண்டுள்ளது.

இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் நீடித்து வந்த இழுபறி சுமூகமாக முடிவுக்கு வந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share