சென்னை டூ நெல்லை… புதிய நெடுஞ்சாலைகள் : பட்ஜெட்டில் எவ்வுளவு கோடி ஒதுக்கீடு தெரியுமா?

Published On:

| By christopher

20cr allocate on highways in tn budget

தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 14) 2025-26ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். 20cr allocate on highways in tn budget

இந்த பட்ஜெட்டில் பல்வேறு சமூகநலன் சார்ந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறைக்காக மொத்தம் 23,179 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தங்கம் தென்னரசு அறிவித்தார்.

தொடர்ந்து அவர் பட்ஜெட்டில் கூறியதாவது, “நாட்டிலேயே பரவலான சாலை வசதிகளைக் கொண்ட மாநிலங்களுள் ஒன்றாகத் தமிழ்நாடு தொடர்ந்து திகழ்ந்து வருகிறது. இவ்வகை சாலை வசதிகளை மேலும் செம்மைப்படுத்திடும் நோக்கத்தில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த நான்கு ஆண்டுகளில் 16,500 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 2,130 கி.மீ. முக்கியச் சாலைகள் நான்குவழி மற்றும் இருவழிச் சாலைகளாக அகலப்படுத்தப்பட்டுள்ளன. 5,000 கி.மீ.க்கும் அதிகமான ஊராட்சி ஒன்றியச் சாலைகள் பிற மாவட்ட சாலைகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன.

ஒரகடம்-செய்யார் தொழில் வழித்தடம்! 20cr allocate on highways in tn budget

🔴அதன் தொடர்ச்சியாக, இவ்வாண்டு சென்னையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலைக் கையாளும் விதமாக, சென்னை நகரின் கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூரிலிருந்து உத்தண்டி பகுதி வரை 14.2 கி.மீ. நீளத்திற்கு நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை 2,100 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (TANSHA) மூலம் அமைக்கப்படும்.

🔴தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், அதிக வேலைவாய்ப்பை உருவாக்கவும், பல தொழில் வழித்தடங்களை உருவாக்கிட அரசு முனைந்துள்ளது. இந்த முன்னெடுப்பின் முதற்கட்டமாக, ஒரகடம்-செய்யார் தொழில் வழித்தடம் உருவாக்கப்படும். இதனால், செய்யார் தொழிற்பூங்காவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளிநாடுகளில் சந்தைப்படுத்த வழிவகை ஏற்படும். இதற்காக, 250 கோடி ரூபாய் மதிப்பில் முதற்கட்டப் பணிகள் நடப்பாண்டில் மேற்கொள்ளப்படும்.

🔴சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக புதிதாக செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழியில் இருந்து திருக்கழுக்குன்றம் வழியாக கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள மாமல்லபுரம் வரை புதிய நான்குவழிச் சாலை சுமார் 28 கி.மீ. நீளத்திற்கு அமைத்திட சாத்தியக் கூறுகள் ஆராயப்படும்.

14 புறவழிச்சாலைகள்! 20cr allocate on highways in tn budget

🔴நகராட்சிகள், நகரங்கள் மற்றும் மாநகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, முக்கிய நகரங்களுக்கு புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, 348 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12.5 கி.மீ. நீளம் கொண்ட கோயம்புத்தூர் மேற்கு புறவழிச்சாலை மற்றும் 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12.4 கி.மீ நீளம் கொண்ட திருநெல்வேலி மேற்கு புறவழிச்சாலை உள்ளிட்ட 14 புறவழிச்சாலைகள் அமைக்கும் பணிகள் மொத்தம் 1,713 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ஆண்டு தொடங்கும். மேலும், 48 கி.மீ. நீள மதுரை வெளிவட்டச் சாலை அமைத்திட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

🔴பசுமையான தமிழ்நாடு என்ற இலக்கினை அடைந்திட நெடுஞ்சாலைகளைப் பசுமையாக்கும் ஒரு பகுதியாக தமிழ் நிலப்பரப்பைச் சார்ந்த வேம்பு, புங்கை, நாவல், புளியமரம் போன்ற இனவகைகளில் 10 இலட்சம் மரங்கள் நடப்பட்டு, புவிசார் குறியிடப்பட்டு முறையாகப் பராமரிக்கப்படும்.

அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய விபத்துகளைக் குறைப்பதன் மூலம், விபத்துகள் இல்லாத மாநிலம் என்ற தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும் விதமாக 200 கோடி ரூபாய் மதிப்பில் அதிக விபத்து நடக்கும் பகுதிகளான குறுகிய வளைவுகள் மற்றும் சாலைச் சந்திப்புகள் மேம்படுத்தப்படும்.

🔴பயணிகள் மற்றும் ஓட்டுநர்களின் வசதிக்காக, மாநில நெடுஞ்சாலைகளில் தெரிவு செய்யப்பட்ட 10 இடங்களில் சிற்றுண்டிச் சாலைகள், தங்கும் விடுதிகள், ஓய்வறை, மின் வாகனங்களுக்கான மின்சக்தி வழங்கிடும் வசதிகள், முதலுதவி மற்றும் அடிப்படை மருத்துவ வசதிகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய சாலையோர வசதி மையங்கள் அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

🔴கன்னியாகுமரியில் நிறுவப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சியின் போது, தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட கண்ணாடிஇழைப் பாலத்தினைப் பார்வையிட, நாடெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளதால் கூடுதலாக சின்ன முட்டம் துறைமுகத்தினை இரண்டாவது முனையமாகக் கொண்டு திருவள்ளுவர் சிலை வரை பயணியர் படகுகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

◾இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைக்கு 20,722 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொதுப்பணித் துறைக்கு ரூ.2,457 கோடி! 20cr allocate on highways in tn budget

🔴மதுரை மாநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், கிண்டியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஆகியவற்றைத் தொடர்ந்து. சென்னையில் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் பன்னாட்டு அரங்கம், தலைநகர் புதுதில்லியில் வைகை தமிழ்நாடு இல்லம், கோவை மற்றும் திருச்சியில் நவீன வசதிகளுடன் கூடிய மாபெரும் நூலகங்கள் என தமிழ்நாட்டின் நவீன அடையாளங்கள் பலவற்றை அழகுற வடிவமைத்துக் கட்டமைக்கும் பணிகளை பொதுப்பணித் துறை மேற்கொண்டு வருகிறது.

🔴புராதனக் கட்டடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் நோக்கோடு, சென்னைப் பல்கலைக்கழக மெரினா வளாகத்தில் உள்ள கீழைக் கலையியல் ஆய்வு நிறுவன புராதனக் கட்டடம், இராணிப்பேட்டையில் உள்ள தேசிங்கு ராஜா ராணி நினைவகம், கோவையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையம், திருச்சியில் இராணி மங்கம்மாள் கோட்டை வளாக அலுவலகங்கள், தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் நகரில் உள்ள மகாகவி பாரதியார் இல்லம் உள்ளிட்ட 17 புராதனக் கட்டடங்கள் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.

◾இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பொதுப் பணித் துறைக்கு 2,457 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share