2026-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி நேற்று (டிசம்பர் 20) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும் முனைப்பில் களமிறங்குகிறது. துணை கேப்டனாக அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2026-ம் ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி தொடங்கி மார்ச் 8-ந் தேதி வரை நடைபெறும்.
இந்தியா, இலங்கையில் இந்த போட்டிகள் நடைபெறும்.
இந்திய அணி வீரர்கள்:
கேப்டன்: சூர்யகுமார் யாதவ்
அபிஷேக் சர்மா
சஞ்சு சாம்சன்
திலக் வர்மா
ஹர்திக் பாண்டியா
சிவம் துபே
அக்சர் படேல்
ரிங்கு சிங்
ஜஸ்பிரித் பும்ரா
ஹர்ஷித் ராணா
அர்ஷ்தீப் சிங்
குல்தீப் யாதவ்
வருண் சக்கரவர்த்தி
வாஷிங்டன் சுந்தர்
இஷான் கிஷன்
- சுப்மன் கில் இந்த உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
- தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
2026 டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் பங்கு பெறும் அணிகள்:
குரூப் A:
இந்தியா
நமீபியா
நெதர்லாந்து
பாகிஸ்தான்
அமெரிக்கா
குரூப் B:
ஆஸ்திரேலியா
அயர்லாந்து
ஓமன்
இலங்கை
ஜிம்பாப்வே
குரூப் C:
வங்கதேசம்
இங்கிலாந்து
இத்தாலி
நேபாளம்.
மேற்கிந்தியத் தீவுகள்
குரூப் D:
ஆப்கானிஸ்தான்
கனடா
நியூசிலாந்து
தென்னாப்பிரிக்கா
ஐக்கிய அரபு அமீரகம்
இந்தியாவும் இலங்கையும் போட்டி நடத்தும் நாடுகள் என்பதால் டி20 உலகக் கோப்பை தொடர்ல் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.
ICC T20 உலகக் கோப்பை – சாம்பியன் பட்டியல்
| வரிசை | நாடு / அணி | மொத்த வெற்றிகள் | வெற்றி பெற்ற ஆண்டுகள் |
|---|---|---|---|
| 1 | இந்தியா | 2 முறை | 2007, 2024 |
| 2 | மேற்கிந்தியத் தீவுகள் | 2 முறை | 2012, 2016 |
| 3 | இங்கிலாந்து | 2 முறை | 2010, 2022 |
| 4 | பாகிஸ்தான் | 1 முறை | 2009 |
| 5 | இலங்கை | 1 முறை | 2014 |
| 6 | ஆஸ்திரேலியா | 1 முறை | 2021 |
