விருப்பமனு பெற்றவர்களிடம் நேர்காணல்… விஜய் சொன்னது என்ன?

Published On:

| By Kavi

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விருப்பமனு வாங்கியவர்களிடம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (மார்ச் 10) நேர்காணல் நடத்தினார். 

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது. 

ADVERTISEMENT

இதுவரை விஜய் கட்சியுடன் எந்த கட்சியும் கூட்டணி அமைக்கவில்லை. தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி சேரும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டு 28 +1 சீட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 

இந்தசூழலில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமை விஜய்யை அணுகியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. 

ADVERTISEMENT

இந்த சூழலில் தேர்தலில் போட்டியிட விருப்பம் மனு வாங்கியவர்களிடம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விஜய் நேர்காணல் நடத்தினார். 

50க்கும் அதிகமானவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. 

ADVERTISEMENT

நேர்காணலுக்கு வந்தவர்களிடம், நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்துவிட்டேன். அரசியலைத் தவிர எனக்கு வேறு ஒன்றும் இல்லை. நான் அரசியலுக்கு வந்த பிறகு என்னென்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். துணிந்து வேலை செய்யுங்கள் என்று விஜய் அறிவுறுத்தியதாக தவெக வட்டாரங்கள் கூறுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share