கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்களுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கூட்டுறவு வங்கிகள் மற்றும் அனைத்து வகையான மத்திய, தொடக்க கூட்டுறவு சங்கங்களில் (பணியாளர் மற்றும் மாணவர் கூட்டுறவு பண்டக சாலைகள் தவிர) நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட வேண்டிய 2,000 உதவியாளர் காலி பணியிடங்கள், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.
ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பின் இந்த காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.
இந்த பணியிடங்களுக்கு இன்று ஆகஸ்ட் 6-ந் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை கூட்டுறவுத் துறையின் மாவட்ட ஆட்சேர்ப்பு மையங்களின் ஆன்லைனில் மட்டுமே அனுப்ப வேண்டும்.
உதாரணமாக சென்னை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு விண்ணப்பிப்பவர்கள் https://www.drbchn.in/
மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு விண்ணப்பிப்பவர்கள் https://www.drbmadurai.net/ உள்ளிட்டவைகளில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆகஸ்ட் 29-ந் தேதிக்குள் இந்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு செப்டம்பர் 5-ந் தேதிக்குள் ஹால் டிக்கெட் வழங்கப்படும்.
செப்டம்பர் 12-ந் தேதி எழுத்து தேர்வு நடத்தப்பட்டு அக்டோபர் 27-ந் தேதி முடிவுகள் வெளியிடப்படும்.
நவம்பர் 12-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நேர்காணல் நடத்தப்பட்டு இறுதி முடிவுகள் நவம்பர் 15-ந் தேதி வெளியிடப்படும்.