20 வால்வோ ஏ.சி. பேருந்துகள் : உங்கள் ஊருக்கு வருகிறதா?

Published On:

| By Kavi

தமிழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வால்வோ பேருந்துகள் பெங்களூரு, கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படவுள்ளது.

தமிழ்நாடு  முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 24) போக்குவரத்துத் துறை சார்பில் சென்னை, தீவுத்திடல் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

ADVERTISEMENT

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 34.30 கோடி ரூபாய் மதிப்பிலான பல அச்சுகள் (MULTI-AXLE) கொண்ட 20 அதிநவீன குளிர்சாதன சொகுசு பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

இதன் இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

ADVERTISEMENT

 20 அதிநவீன குளிர் சாதன புதிய பேருந்தின் சிறப்பம்சங்கள்

2×2 சீட்டிங் அமைப்புடன் அதிகபட்சம் 51 வசதியான இருக்கைகள், வெளிப்புற காட்சியை ரசிக்க விசாலமான Panoramic ஜன்னல்கள், உயர்தர மேல்நிலை பொருட்கள் வைக்குமிடம் (Overhead Luggage Compartment),

ADVERTISEMENT

UNOMINDA (Harita) VFX09 உயர்தர இருக்கைகள்  – Calf Support வசதியுடன் கூடிய இருக்கைகள், இரட்டை USB Mobile Charging Ports, பத்திரிகைகள், பாட்டில் ஹோல்டர், காலணி வைக்கும் இடம்,

வசதியான மற்றும் பாதுகாப்பான ஓட்டுநர் கேபின் – மனித உடல் அமைப்பிற்கு ஏற்ற Ergonomic Control Layout, வளைந்த வடிவ Dashboard, Air-Suspension கொண்ட ஓட்டுநர் இருக்கை, முழங்கால் பாதுகாப்பு அமைப்பு (Knee Impact Protection System);

மேம்பட்ட PX Suspension System – மேம்பட்ட Steering Stability, Air Spring-களில் குறைந்த அழுத்தம், Shock Absorber System. EVSC, ESP, ASR  உள்ளிட்ட மேம்பட்ட பிரேக்கிங் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள், பயணிகள் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் தீ பாதுகாப்பு அமைப்பு, அவசரநிலையில் விரைவாக பயணிகளை வெளியேற்ற அகலமான Roof Escape Hatch, முன், பின் மற்றும் பக்க மோதல்களில் தாக்கத்தை குறைக்கும்  FUP / FIP / SUPD பாதுகாப்பு அமைப்புகள்,  மேம்பட்ட Rollover & Pedestrian பாதுகாப்பு வசதி; 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்கள் – BS-VI Emission Norms-க்கு முழுமையான இணக்கம், EGR + SCR தொழில்நுட்பம் மூலம் NOx & Emission குறைப்பு மற்றும் குறைந்த கார்பன் உமிழ்வு, அதிக வலிமையான Monocoque / Reinforced Body Structure, நீண்ட ஆயுட்காலத்திற்கான Anti-Corrosion Treatment, அவசரகாலத்தில் பயணிகள் வெளியேறுவதற்கு அவசரகால வெளியேறும் வழி, விபத்துகளை தவிர்த்திட வாகனத்தின் முன் மற்றும் பின் பகுதிகளில் கேமராக்கள், வாகன செயல்திறன் மற்றும் கோளாறுகளை உடனுக்குடன் கண்டறிய Electronic Diagnostic Control வசதி, ரிவர்ஸ் சென்சார் வசதி மற்றும் கேமரா, வாகனத்தை கண்காணித்திட Bus Tracking System வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இப்பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

சென்னை, பெங்களூரு, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், நாகர்கோவில், திருச்செந்தூர், திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு இந்த வால்வோ ஏ.சி. பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

50ஆவது ஆண்டு பொன்விழா

பேருந்து போக்குவரத்தை நாட்டுடைமையாக்கும் வகையில் தமிழ்நாடு அரசால் அரசு போக்குவரத்து கழகங்கள் தொடங்கப்பட்டு 50-ஆம் ஆண்டு (1976 – 2025) பொன்விழா நடைபெற்று வருவதையொட்டி போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி வரும் 1,05,778 ஊழியர்களுக்கு 3.33 கோடி ரூபாய் மதிப்பிலான சுவர் கடிகாரங்கள் வழங்கிடும் விதமாக முதல்வர் இன்று 10 போக்குவரத்து ஊழியர்களுக்கு சுவர் கடிகாரங்களை வழங்கி தொடங்கி வைத்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share