கரூரில் நடந்த விஜய் பிரச்சாரத்தின் போது கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வருகின்றன.
30க்கும் அதிகமானோர் மயங்கியுள்ளனர். இதில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரும், மூதாட்டி ஒருவரும் உயிரிழந்திருக்கின்றனர்.
அரசு மருத்துவமனைக்கும், அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனைகளுக்கும் ஆம்புலன்ஸுகள் வந்துகொண்டே இருக்கின்றன. அங்கு சூழல் அசாதரணமாக மாறியுள்ளது.