அதிமுகவில் 150 வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 13 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் களைகட்டி உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
குறிப்பாக எதிர்க்கட்சியான அதிமுக முதல் கட்டமாக 23 வேட்பாளர்களையும் இரண்டாவது கட்டமாக 127 வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளனர்.
இதில் 17 பெண்களுக்கு அதிமுகவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை தொகுதியில் எஸ். செய்யது சுல்தான் சம்சுதீன் என்ற இஸ்லாமிய வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்.
இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் தற்போதை எம்எல்ஏக்களாக உள்ள 13 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
வாய்ப்பு மறுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் விபரம்
1) சபாநாயகர் – தனபால்
2) பாப்பிரெட்டிபட்டி – கோவிந்தசாமி
3) ஆரணி – சேவூர் ராமச்சந்திரன்
4) வானூர் – சக்கரபாணி
5) கள்ளக்குறிச்சி – செந்தில்குமார்
6) ஏற்காடு – சித்ரா
7) சங்ககிரி – சுந்தர்ராஜன்
8) சேலம் தெற்கு – பாலசுப்பிரமணியன்
9) வீரபாண்டி – ராஜா முத்து
10) ஸ்ரீவில்லிப்புத்தூர் – மன்ராஜ்
11) மேட்டுப்பாளையம் – செல்வராஜ்
12) திருப்பூர் வடக்கு – விஜயகுமார்
13) மடத்துக்குளம் – மகேந்திரன்
