ராஜஸ்தான் மாநிலத்தில் சரக்கு லாரி அடுத்தடுத்து 17 வாகனங்கள் மீது மோதியதில் 12 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் அருகே ஹர்மதா பகுதியில் இன்று (நவம்பர் 3) பிற்பகலில் சென்று கொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை மீறி சென்றது. லோகமண்டி சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிர் திசையில் வந்த 17 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு குழுவினர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் 30 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாரி சுமார் 300 மீட்டர் தூரம் வரை கட்டுப்பாட்டை இழந்து சென்றதாகவும், அடுத்தடுத்து 17 வாகனங்களின் மீது மோதியதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
